பார்த்திபன் மகளுக்கு வந்த ஆசை.. வெளியான Edit புகைப்படம்- வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்
நடிகர் பார்த்திபன் மகள் வெளியிட்ட புகைப்படம் இணையவாசிகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் பார்த்திபன்
தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர்களில் ஒருவர் தான் நடிகர் பார்த்திபன்.
இவர் சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக கே. பாக்யராஜிடம் கடந்த 1984 ஆம் ஆண்டு துணை இயக்குனராக அறிமுகமானார். அவருடன் இணைந்து சுமார் 20 படங்களில் பணியாற்றியுள்ளார். அதில் சில படங்களில் சிறு வேடங்களிலும் நடித்திருப்பார்.
இதனை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய பார்த்திபன் கடந்த 1981 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான “ராணுவ வீரன்” என்ற படத்தில் மணமகன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
பின்னர் பறவையின் மறுபக்கம், வேடிக்கை மனிதர்கள், துரோகம் அதிகம் இல்லை, அன்புள்ள ரஜினிகாந்த், போன்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார்.
காதல் திருமணம்
அந்த சமயத்தில், நடிகர் பார்த்திபன் நடித்த “புதிய பாதை” என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
அந்த படத்தில் அவருக்கு துணையாக நடித்த நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையில் சிறந்த துணை இயக்குநராக இருந்த பார்த்திபன், புதிய பாதை படத்தின் மூலம் தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் விருது, சிறந்த படத்திற்கான தேசிய விருது மற்றும் சிறந்த கதைக்கான தமிழக அரசின் விருது ஆகியவற்றை பெற்றுக் கொண்டார்.
இவ்வளவு பிரபலமான பார்த்திபனின் திருமண வாழ்க்கை சுமாராக 11 வருடங்களில் முடிவுக்கு வந்தது, அதன் பின்னர் அவர் இயக்கிய படங்களும் சரியானதொரு வெற்றியை தரவில்லை.
பார்த்திபன் மகளுக்கு வந்த ஆசை
இந்த நிலையில், பார்த்திபன்- சீதா தம்பதிகளுக்கு இரண்டாவதாக அபிநயா என்ற மகள் இருக்கிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நரேஷ் என்பவரை திருமணம் செய்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அபிநயா, தன்னுடைய அப்பா- அம்மா இருவரையும் இணைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் பார்த்திபன்- சீதா ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
அத்துடன், இவர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். மகளின் ஆசைக்கான லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |