பரோட்டாவில் இதையும் சேர்க்கலாமா?
சிலருக்கு கீரை வகைகள் என்றால் அவ்வளவாகப் பிடிக்காது.
அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு. ஆனால், கீரை வகைகளைக் கொண்டு விதவிதமாக சமைத்து உண்டால் ஆரோக்கியமும் கூடும், சுவையாக சாப்பிட்டது போன்றும் இருக்கும்.
இப்போது புதினா பரோட்டா எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
புதினா - 2 கப்
மைதா மா - 4 கப்
நெய் - 1 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - 100 மில்லி லீட்டர்
பச்சை மிளகாய் - 4
சீனி - 1 தேக்கரண்டி
செய்முறை
மைதா மாவை சலித்துக் கொள்ளுங்கள், புதினாவை நறுக்கிக் கொள்ளுங்கள், பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.
மைதா, புதினா, அரைத்த பச்சை மிளகாய், நெய், நல்லெண்ணெய், உப்பு இவற்றை ஒன்றாகக் கலந்து தளர்த்தியாக பிசைந்து மேலும் 3 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் நேர்த்து மறுபடியும் பிசைந்து 6 மணி நேரம் வைக்கவும்.
பின்னர் மாவை உருண்டைகளாக செய்து பூரிக்கட்டையின் தேல் வைத்த பலகை அளவு விரல்களால் இழுத்து விரிக்கவும்.
விரித்த மாவை மடிப்புகளாக செய்து வட்டமாக சுற்றி அரை அங்குல பருமனாக தட்டவும்.
தோசைக்கல்லில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பரோட்டாவைப் போடவும்.
பொன் நிறமாக வெந்ததும் எடுக்கவும்.