இந்த பிரச்சனை இருந்தா பப்பாளியை தொடக் கூட வேண்டாம்! இல்லன்னா உயிருக்கே ஆபத்தாயிடும்?
health
papaya
By Nivetha
இன்று பலரும் அதிகம் வாங்கி சாப்பிடும் பப்பாளியிலும் தீமைகள் உண்டு.
இப்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது குறித்து விரிவாக காண்போம்.
- உங்களுக்கு ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனை இருந்தால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பப்பாளி பழத்தை சாப்பிடாதீர்கள். ஏனெனில் பப்பாளியில் உள்ள பாப்பைன் அழற்சியை ஏற்படுத்தி, சுவாசிப்பதில் பிரச்சனையை உண்டாக்கும்.
- பப்பாளியை உட்கொண்டால் வீக்கம், தலைச்சுற்றல், முகப்பரு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
- பப்பாளி சூடான பண்புகளைக் கொண்டது. எனவே கர்ப்பிணிகள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.
- பப்பாளி கருப்பையில் உள்ள கருவிற்கு தீங்கு விளைவிக்கும்.
- முக்கியமாக பப்பாளி கருச்சிதைவை கூட ஏற்படுத்தும்.
- மஞ்சள் காமாலை உள்ள நோயாளிகள் பப்பாளியை மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே சாப்பிட வேண்டும். இதில் உள்ள பாப்பைன் மற்றும் பீட்டா கரோட்டின் மஞ்சள் காமாலையை அதிகரிக்கும்.
- அறுவை சிகிச்சை செய்தவர்கள் சில வாரங்களுக்கு பப்பாளியை பழத்தை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை சாப்பிட்டால், அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயம் விரைவில் ஆறாமல் பாடாய் படுத்திவிடும்.
- இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுப்பவர்கள், பப்பாளியை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடக்கூடாது.
- ஏனென்றால், பப்பாளியும் இரத்தத்தை மெலிதாக்கும் திறன் கொண்டது. ஆகவே இந்த மருந்துகளை எடுப்பவர்கள் பப்பாளியை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்வது நல்லது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US