அழியப்போகும் மனிதர்கள்! விரைவில் 3ம் உலகப்போர்: பாபா வங்காவைத் தொடர்ந்து பெண் ஜோதிடர் பகீர்
3ம் உலகப்போர் விரைவில் நடக்க போவதாக, கியூப ஜோதிட பெண் ஒருவர் கணித்து கூறியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாபா வங்கா
பல்கேரியாவைச் சேர்ந்த கண்பார்வையற்ற முதியவரான பாபா வங்கா, தனது 12 வயதில் பார்வையை இழந்துவிட்ட நிலையில், அதன் பின்பு உலகில் நடக்கும் நிகழ்வுகளைக் குறித்து மிகச் சரியாக கணித்து கூறிவந்தார்.
இவர் 1996ம் ஆண்டு தனது 85ம் வயதில் மரித்துப் போன நிலையில், இவர் முன்கூட்டியே கணித்து கூறிய சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது விமான தாக்குதல், அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர்தான் பதவியேற்பார், 2016-ல் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலிமை பெறும், ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும், குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார், உலகில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும், என பல விஷயங்களை கணித்து கூறியவராவார்.
இதனால் பாபா வங்காவின் கணிப்பு மிகுந்த கவனத்துடன் கவனிக்கப்படுகின்ற நிலையில், தற்போது பெ்ண் ஜோதிடர் ஒருவர் பகீர் கிளப்பியுள்ளார்.

3ம் உலகப்போர் வரும்
கியூபாவைச் சேர்ந்த மோனி விடன்ட்டே என்ற ஜோதிட பெண்மணி கணித்து சொன்னதும் பலமுறை நடந்துள்ளது. அந்தவகையில், இப்போது, மூன்றாம் உலகப்போர் பற்றி தன்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ளார்... மூன்றாம் உலகப்போர் கண்டிப்பாக நடக்க போகிறதாம்.. 9 வருடங்களுக்கு இந்த போர் நீடிக்கும் என்றும், அதற்கு முக்கிய காரணமாக சீனாதான் இருக்கும் என்றும் உறுதியாக கூறியுள்ளார்.
சீனா அமெரிக்காவை வீழ்த்தி வல்லரசாக மாறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும், அதன் காரணமாகவே உலகப் போரை தூண்டிவிடும். இந்த உலகப்போரில், குண்டுகளும், ஏவுகணைகளும் வந்துவிழும், உலகின் ஒவ்வொரு மனிதரும் அழியப் போகிறார்கள்" என்றும் கூறி மோனி உலக நாடுகளை கலங்கடித்துள்ளார்.
ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வரும்நிலையில், இந்த நாடுகளுக்குள் போர் தொடர்ச்சியாக நடக்கும், இதனால் ஆபத்து என்றும் மோனி சொல்கிறார்.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        