டான்ஸ் ஆடிய மணமகளை அறைந்த மணமகன்... அடுத்து நடந்த தரமான சம்பவம்! பேரதிர்ச்சியில் மாப்பிள்ளை குடும்பம்
திருமண விழாவில் நடனமாடிய மணப்பெண்ணை, மணமகன் அடித்ததால் முறைமாமனை மணமகளுக்கு திருமணம் நடந்ததால் மாப்பிளை வீட்டார் அதிர்ந்து போயுள்ளனர்.
இந்த சம்பவம் 20 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுபாளையம் ஊரைச்சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த ஜெயசந்தியா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
சம்பவ தினத்தன்று காடாம்புலியூரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பெண் வீட்டார்கள் அந்த திருமண நிகழ்வில் பெண் அழைப்பு முடிந்ததும் டிஜே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்படி பெண் அழைப்பு முடிந்ததும், திருமண மண்டபத்தில் அனைவரும் டிஜே பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மணமகள் வீட்டார்கள், மணமகன் மற்றும் மணப்பெண்ணை நடனமாட வற்புறுத்தினர்.
அப்போது மணமகள் அவரது ஆண் உறவினர்களுடன் சினிமா பாடலுக்கு வெகு நேரமாக ஆடியதால் ஆத்திரமடைந்த மணமகன் அனைவரது முன்னிலையிலும் மணமகளை கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மணமகள் எனக்கு இந்த திருமணம் வேண்டாம் என கூறிவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டார்.
பின்னர் அன்றைய தினமே அந்த பெண்ணுக்கும், அவரது முறைமாமனுக்கும் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலில் வைத்து பெண் வீட்டார்கள் திருமணம் செய்து முடித்தனர்.
இந்த தகவலையறிந்த மணமகன் ஸ்ரீதர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தன்னை திருமண பெண்னையும் நடனம் ஆடச் சொல்லி பெண் வீட்டு உறவினர்கள் கட்டாயப்படுத்தி ஆட வைத்தனர்.
பெண் வீட்டு உறவினர் மணப்பெண்ணின் கழுத்தில் கையை வைத்துக் கொண்டு நடனமாடியது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது. ஏன் இது போல் நடந்து கொள்கிறாய்? என்று கேட்டதற்கு அவரது குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்திவிட்டதுடன் மணப்பெண்ணுக்கு விருப்பமில்லாமல் அன்றே வேறு ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனால் நானும் எனது குடும்பமும் உறவினர்களும் மனவேதனை அடைந்திருக்கிறோம். ஆகையால் மணமகள் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022