அதிகமாக பானிப்பூரி சாப்பிடுபவா நீங்கள்? இந்த பிரச்சனைகள் உயிரை குடிக்கும்
பானிப்பூரி என்று சொன்னாலே சிலருக்கு வாயில் எச்சில் ஊறும். இந்த அளவிற்கு இதன் சுவைக்கு மக்கள் அடிமையாகி காணப்படுகின்றனர். இது இனிப்பு மற்றும் புளிப்பு நீரில் நனைத்த மொறுமொறுப்பான ஒரு உணவாகும்.
குறிப்பாக இது ஒவ்வொரு தெருக்கடைகளிலும் விற்கப்படும்.இது நல்ல காரசாரமாக இருப்பதால் இதை அனைவரும் விரும்பி சாப்பிடகிறார்கள். அனால் இதை அதிகமாக உண்ணும் போது சில நேரங்களில் உடல்நலத்திற்கு பல பிரச்சனையாக மாறக்கூடும்.
ஆனால் இது பலருக்கும் தெரியாத ஒன்று. எனவே அதிகமாக பானிப்பூரி சாப்பிடும் ஒரு நபராக நீங்கள் இருந்தால் இதனால் வரும் பிரச்சனைகளையும் நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம்.
அதிகமான பானிப்பூரி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை
1.பானிப்பூரியின் தண்ணீரும் அதில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களும் பெரும்பாலும் சுத்தம் இல்லாமல் தயாரிக்கப்படுகின்றன.
சாலையோரங்களில் விற்கப்படும் இந்த பானிப்பூரிகள் மாசுபட்ட நீர் மற்றும் அழுக்கு கைகள் காரணமாக பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் நிறைந்திருக்கலாம்.
இது உணவு விஷம், இரைப்பை தொற்று மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
2.முக்கியமாக உடல் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பவர்கள் பானிப்பூரி சாப்பிட கூடாது. பானிப்பூரி மாவு அல்லது ரவையால் தயாரிக்கப்படுகின்றது.
இதில் மிகக் குறைந்த நார்ச்சத்து மற்றும் அதிக கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
இதற்கு மேல் அதில் உள்ள உருளைக்கிழங்கு மற்றும் இனிப்பு நீர் கலோரிகளை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. இதனால் விரைவாக எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும் .
3.பானிப்பூரி நீரில் நிறைய உப்பு, மசாலாப் பொருட்கள் மற்றும் புளிப்பு பொருட்கள் உள்ளன. அதிகப்படியான உப்பு மற்றும் மசாலாப் பொருட்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும், இது உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
4.இந்த உணவில் காரமான நீர் மற்றும் மசாலாப் பொருட்கள் இருப்பதால் அவை செரிமான அமைப்பைப் பாதிக்கும். அதிக காரமான மற்றும் புளிப்பு உணவுகளை சாப்பிடுவது வயிற்று எரிச்சல், அமிலத்தன்மை மற்றும் வாயு உருவாவதற்கு வழிவகுக்கிறது.
5.அடிக்கடி வெயிலில் பாணிப்பூரி சாப்பிடுவதால் அது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மோசமாக பாதிக்கும். அசுத்தமான நீர் மற்றும் அழுக்கு மசாலாப் பொருட்கள் உடலில் தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அதிகரித்து, மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமானால் சளி, இருமல் மற்றும் பிற நோய்களுக்கு ஆளாக நேரிடும். எனவே எப்போதாவது பாணிப்பூரி சாப்பிடலாம்.
எப்பொழும் சாப்பிடுவதை நிறுத்துவது நல்லது. இதற்கு மாறாக நீங்கள் வீட்டிலேயே பாணிப்பீரி செய்து சாப்பிடலாம். அது உடல் ஆரோக்கியத்தை மேன்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
