சிறிய வயதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள்... தீயாய் பரவும் புகைப்படங்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள் சிறுவயதில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, ஹேமா, வெங்கட், குமரன் என பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர். மேலும் அதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் விஜே சித்ரா அசத்தலாக நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார்.
ஆனால் அவர் கடந்த டிசம்பர் மாதம் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் தற்போது முல்லையாக பாரதிகண்ணம்மா தொடரில் அறிவுமணியாக நடித்த காவியா நடித்து வருகிறார்.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டார் தொடரில் தற்போது சீரியலின் முக்கிய நாயகனான மூர்த்தியின் திருமண குறித்த பிளாஷ பேக் சிறப்பு காட்சிகள் 2.30 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களான தனம், முல்லை,ஐஸ்வர்யா, ஜீவா, கதிர், கண்ணனின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.