மேக்கப் இல்லாமல் அசிங்கமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை: காணொளியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவாக நடித்து வரும் நடிகை தீபிகா மேக்கப் இல்லாமல் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அண்ணன் தம்பி பாசத்தினை மையமாக கொண்டுள்ள இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட இல்லத்தரசிகள் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். மூன்று அண்ணன்களுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் கடைசி தம்பியான கண்ணன் காதல் விவகாரம் தான் தற்போது பிரச்சனையாக வெடித்து இருக்கிறது.
அவர் உறவுக்காரப் பெண் ஐஸ்வர்யா என்பவரை தான் காதலிக்கிறார். ஆனால் ஐஸ்வர்யாவுக்கு வேறு ஒரு பையனுடன் திருமணம் ஆகிவிட்டது. அவரும் குடும்பத்துக்கு உறவினர் ஒருவரது மகன்தான். இதனால் பல்வேறு பிரச்சனைகள் தற்போது சீரியலில் நடைபெற்று வருகிறது.
இது ஒருபுறமிருக்க ஐஸ்வர்யாவாக நடித்து வரும் நடிகை தீபிகா மேக்கப் இல்லாமல் வெளிவிட்டு இருக்கும் வீடியோவை பார்த்து சின்னத்திரை ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள். “அய்யோ எல்லாமே மேக்கப்பா” என கேட்கும் அளவுக்கு நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.