பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு திடீர் அறுவை சிகிச்சை! அதிர்ச்சியில் ரசிகர்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கேரக்டரில் நடிக்கும் சின்னத்திரை நடிகை ஹேமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
சின்னத்திரை டிஆர்பி ரேட்டின் முன்னணியிலிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பத்தில் 4 அண்ணன்கள், அவர்களது மனைவிகளிடையே நடக்கும் அன்பு, பாசம், போராட்டம், மோதல் உள்ளிட்டவை குறித்து கூறுகின்றது.
இந்த சீரியலில் தனம், முல்லை, மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர்.
இந்த சீரியலில் நடித்து வரும் ஹேமா, மீனா எனும் கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும், இவர் பிரபலமானது பாண்டியன் ஸ்டோர்ஸில்தான்.
இவருக்கு இணையத்தில் ஃபேன்ஸ் பக்கங்களும் உண்டு. கொரோனா லாக்டவுன் சமயத்தில் யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வந்தார்.
திடீர் அறுவைசிகிச்சை
இந்த நிலையில் இவர் தனது யூடியூப் சேனலில் மருத்துவமனையில் அட்மிட் ஆனது, பரிசோதனைகள் செய்தது, ஆபரேஷன் செய்தது என பல காட்சிகளை ஷேர் செய்திருந்தார். கடைசியில்தான் என்ன ஆபரேஷன் என்ற விஷயத்தை தனது ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.
சில மாதங்களாக ஹேமாவின் கழுத்துக்கு கீழ் பகுதியில் 4 செ.மீ. அளவில் ஒரு கட்டி இருந்ததாம். இதை மருத்துவரிடம் சோதனை செய்ததில் இது கேன்சர் கட்டியாக மாறிவிடும் என்ற பயத்தில் தற்போது அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...