Pandian Stores 2: கோவிலில் மீனாவிடம் மாட்டிக் கொண்ட சரவணன்... மயிலு வாழ்க்கை என்னவாகும்?
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மயிலுக்கு மீனா வேலை வாங்கி கொடுத்த நிலையில், தற்போது மீண்டும் கோவிலில் சரவணன் மற்றும் அவரது தோழியை ஒன்றாக மீனா பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது. ராஜீ திருமணம் விடயத்தினால் கோமதி, பாண்டியன் இருவரிடையே பிரச்சனை எழுந்துள்ளது.
மற்றொரு புறம் மயில் பொய் சொல்லி சரவணனை திருமணம் செய்து, கடைசியாக நீதிமன்றம் வரை குடும்பத்தினரை இழுத்துள்ளார்.

இதனால் பாண்டியன் குடும்பம் மயிலை ஒதுக்கியுள்ளது. ஆனால் மீனா மட்டும் மயிலுக்கு ஆதரவாக சில உதவிகளை செய்து வருகின்றார்.
தனது வேலை குறித்து மயிலு மீனாவிடம் கோவிலில் வைத்து பேசிய நிலையில், அப்பொழுது சரவணன் தனது தோழியுடன் கோவிலுக்கு வந்துள்ளார்.
ஏற்கனவே மீனா இவர்களை பார்த்த நிலையில், தற்போதும் பார்த்ததால் நேரடியாக சரவணனிடம் கேள்வி கேட்கின்றார். சரவணன் மீனாவின் கேள்விக்கு என்ன பதில் அளிப்பார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |