Pandian Stores 2: வேறொரு பெண்ணுடன் சரவணன்... அதிர்ச்சியடைந்த மீனா
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மயிலுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் மீனா, சரவணனை வேறொரு பெண்ணுடன் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது. சமீபத்தில் கோமதி தனது அண்ணன்களுடன் சேர்ந்த நிலையில், ராஜீ திருமண உண்மை மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மயில் பொய்சொல்லி சரவணனை திருமணம் செய்தது மட்டுமின்றி, குடும்பத்தையே நீதிமன்றத்தின் படியேற வைத்துள்ளார்.

மேலும் மயிலின் வீட்டிலும் மயிலை வெறுத்த நிலையில், தற்போது மீனா அவருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளார். தற்போது மயிலுக்கு வேலை ஒன்றினையும் ஏற்பாடு செய்துள்ளார்.
இத்தருணத்தில் கோவிலில் சரவணன் வேறொரு பெண்ணுடன் இருப்பதைப் பார்த்த மீனா அதிர்ச்சியடைந்துள்ளார். சரவணன் அப்பெண்ணை காதலிக்க ஆரம்பிப்பாரா? மயிலு வாழ்க்கை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |