தனத்தினால் தலைகீழாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்... சோகத்தில் பார்வையாளர்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்திற்கு உடல்நிலை சரியில்லாததால் வீட்டில் உள்ள அனைவரும் தங்களது உணவு வழக்கத்தினை மாற்றியுள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் சமீபத்தில் விருது கிடைத்துள்ளது.
தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் பிரியாமல் இருந்து வந்த அண்ணன் தம்பிகள் சமீப காலமாக பிரிந்து வெளியே சென்றனர். பின்பு மீண்டும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
இதில் தனத்திற்கு மார்பக புற்றுநோய் வந்த விடயம் வீட்டில் யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், ஐஸ்வர்யாவால் அனைவருக்கும் உண்மை தெரிந்துள்ளது.
இதனால் வீட்டில் உள்ள அனைவரும் தனத்தினை பத்திரமாக பார்த்து வருவதால், அவர் சாப்பிடும் உணவையே வீட்டில் அனைவரும் சாப்பிடுவதற்கு முடிவு எடுத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |