கத்தை கத்தையாக பணம்... மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா!... பாண்டியன் ஸ்டோர்ஸில் வெடித்த அடுத்த உண்மை
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா, அவரது சித்தியிடம் கடனாக பணம் வாங்கிய நிலையில், இதனை முல்லை தெரிந்து கொண்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் சமீபத்தில் விருது கிடைத்துள்ளது.
தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் பிரியாமல் இருந்து வந்த அண்ணன் தம்பிகள் சமீப காலமாக பிரிந்து வெளியே சென்றனர். பின்பு மூர்த்தி கதிர் இருவரும் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
மீண்டும் சிக்கிய ஐஸ்வர்யா
வீட்டை விட்டு வெளியே சென்ற ஐஸ்வர்யா கண்ணன் ஆடம்பர வாழ்க்கையால் அதிக கடன் பட்டு பாரிய பிரச்சினையாகி, இதனால் கதிர் கைதாகவும் செய்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒன்றாக வசித்து வரும் ஐஸ்வர்யா கண்ணன், ஐஸ்வர்யா தனது சித்தியிடம் வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்கும் போது முல்லை அதனை பார்த்துவிடுகின்றார்.
கண்ணன் அலுவலகத்தில் ஒருபுறம் லஞ்சம் வாங்கிவரும் நிலையில், மற்றொரு புறம் தனத்திற்கு மார்பக புற்றுநோய் தாக்கியுள்ளது. இந்த உண்மை மீனாவிற்கு மட்டுமே தெரியவந்துள்ள நிலையில் கதையின் போக்கு அடுத்து எவ்வாறு இருக்கும் என்று அதிக ஆர்வத்தில் ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |