அம்மாவுக்காக பாண்டியனை தூக்கி வீசிய கோமதி- அடுத்தடுத்து நடக்கும் வெடிக்கும் பிரச்சினை
அம்மாவுக்காக பாண்டியனை தூக்கி வீசிய கோமதியின் குமுறலால் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் கவலையடைந்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த 5 வருடங்களாக முதல் சீசன் வெற்றிகரமாக முடித்த இந்த சீரியல் தற்போது தன்னுடைய இரண்டாவது பாகத்தை துவங்கியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்கள் நடிக்கிறார்கள். 2ஆம் பாகத்தில் அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் வகையில் கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது.
பாண்டியனை தூக்கி வீசிய கோமதி
இந்த நிலையில், தங்கமயில் செய்த பித்தலாட்டங்கள் அனைத்தும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வீட்டிலுள்ளவர்களுக்கு தெரியவந்து அது ஒரு பெரிய பிரச்சினையாக வீட்டில் வெடித்து கொண்டிருந்தது.
இது ஒருபுறம் இருக்கையில், தற்போது பாண்டியனின் மனைவி கோமதியின் அம்மாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் கோமதியும், ராஜீவும் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார்கள்.
வீட்டிலுள்ளவர்கள் முன்னிலையில் அமர்ந்து தன்னுடைய அம்மாவுக்காக கணவரை தூக்கி வீசிவிட்டு வருவதாக கோமதி கூறுகிறார். அத்துடன் பாண்டியன் இருக்கும் திசை பக்கம் கூட இனி வரமாட்டேன் அம்மா..” எனவும் கதறி அழுகிறார்.
இவற்றையெல்லாம் பார்த்து கொண்டு பாண்டியனாலும் இருக்க முடியவில்லை. இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இனி வரும் எபிசோட்கள் எப்படி இருக்கும் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |