கணவரிடம் வசமாக சிக்கிய மயில்.. வீட்டில் வெடிக்கும் பூகம்பம்- சரவணனின் அதிரடி
சரவணன் ஹோட்டலுக்கு சாப்பிட வரும் பொழுது தங்க மயில் வசமாக சிக்கிக் கொள்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்- 2
பிரபல தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதலாம் பாகம் முடிந்து தற்போது இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் கணவன்- மனைவியால் குடும்பத்திற்கு என்னென்ன பிரச்சினைகள் வருகிறது. குடும்பத்தில் என்னென்ன விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதனை கருவாக கொண்டு கதைக்களம் சென்றுக் கொண்டிருக்கிறது.
அரசி பக்கத்து வீட்டிலுள்ள குமாரை காதலித்து வசமாக சிக்கிக் கொள்கிறார். பாண்டியனை போன்று சரவணனுக்கும் பொய் கூறினால் சுத்தமாக பிடிக்காது.
அரசி கூறிய பொய்கள் அனைத்தையும் சரவணன் தான் வீட்டில் வைத்து அனைவரிடமும் கூறினார். இதனால் பயங்கரமாக பிரச்சினைகள் வெடித்து அரசிக்கு திருமணம் செய்து கொடுத்து விடலாம் என்ற முடிவில் பாண்டியன் இருக்கிறார்.
வீட்டில் வெடிக்கும் பூகம்பம்
இந்த நிலையில், தங்க மயில் படிக்கவே இல்லை. அவர் திருமணத்திற்காக இவ்வளவு பொய்கள் கூறினார் என்ற விடயம் சரவணனுக்கு தெரியவந்துள்ளது.
ஐடி நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு ஹோட்டல் ஒன்றில் தங்க மயில் வேலைச் செய்துக் கொண்டிருக்கும் பொழுது சரவணனிடம் சிக்கிக் கொள்கிறார்.
இவ்வளவு நாட்களாக தங்கமயில் வேலை செய்யும் ஹோட்டலுக்கு தெரிந்தவர்கள் யாராவது வந்தால், அவர்களிடம் இருந்து ஓடி ஒளிந்துகொண்டு தப்பி வந்தார்.
அவரே எதிர்பாராமல் கணவர் வந்திருக்கும் பொழுது ஓடர் எடுக்க வந்து சிக்கிவிட்டார். தங்கமயில் பொய் கூறியதை அறிந்து கொண்ட சரவணன் கோபமாக வீட்டுக்கு செல்கிறார்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |