ஷாக்கான பிரியங்கா! பாலாவிடம் மேடையில் காதலை கூறிய 4 பெண்கள் - வெளியான குதூகல வீடியோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 1000வது எபிசோட்டின் வெற்றி விழாவை விஜய் தொலைக்காட்சி பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியின் பிளாக் பஸ்டர் சீரியலான "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தொடரின் வெற்றி கொண்டாட்டத்தில் குக் வித் கோமாளி பாலாவும் இணைந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி பிரியங்கா தான் தொகுத்து வழங்குகின்றார்.
ஞாயிற்றுக்கிழமை (நாளை) மதியம் 3 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
பாசத்தையும், கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையையும், ஈடு செய்ய முடியாத அன்பையும் வெளிக்காட்டும் இந்த தொடர் நிச்சயமாக ரசிகர்களின் மனதில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அழிந்து வரும் கூட்டு குடும்பத்தின் அவசியத்தை உணர்த்தும் இந்த சீரியல் பலரது இல்லங்களில் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பாலாவுக்கு மூத்த நடிகைகள் 4 பேர் காதல் பிரபோஸ் செய்ய வேண்டும் என்ற டாஸ்கினை பிரியங்கா கொடுத்துள்ளார்.
இதில் க்யூட்டாக மூத்த நடிகைகள் பாலாவிடம் ரொமான்ஸ் செய்துள்ள ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.