பிரபல நடிகைக்கு கணவர் மட்டும் நடத்திய வளைகாப்பு! ஆடம்பரம் இல்லாத அசத்தல் புகைப்படம்
பிரபல சீரியல் நடிகை அனு மிகவும் சிம்பிளான முறையில் தனது வளைகாப்பு நிகழ்ச்சியினை நடத்தியுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை அனு
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியலில் ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை அனு. ஆரம்பத்தில் இந்த சீரியலில் பழைய நிகழ்வுகள் அனைத்தையும் மறந்துவிட்ட நிலையில், தற்போது சரியாகி தனது கணவருடன் வாழ்ந்து வருகின்றார்.
இவரது கதாபாத்திரத்தினையே தற்போது இயக்குனர் மாற்றி அமைத்துள்ளார். ஆம் குறித்த சீரியலில் இவரது கதாபாத்திரத்தினையும் கர்ப்பமாக இருப்பதாகவே கதையை அமைத்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை அனு தனது கணவர், குழந்தை மற்றும் அவரது செல்லப்பிராணியான நாய் இவர்களுடன் தனது வளைகாப்பு நிகழ்வினை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அனுவின் ஆச்சரிய பதிவு
புகைப்படத்தினை வெளியிட்ட அனு கூறியுள்ளது என்னவெனில், எனது வளைகாப்பு சிம்பிளாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என நானும் விக்கியும் விரும்பினோம்.
விக்கி தான் எனக்கு நலங்கு செய்தார். அந்த தருணம் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. அப்போது புதுமணப் பெண் போல் என் முகம் சிவந்தது” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இதனை அவதானித்த பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



