தமிழா தமிழாக்கு முற்றுப்புள்ளி வைத்த கரு. பழனியப்பன்! பின்னால் மறைந்திருக்கும் மர்மக்கதை
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய “தமிழா தமிழா” நிகழ்ச்சியிலிருந்து தொகுப்பாளர் கரு. பழனியப்பன் விலகுவதாக அறிவித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டிஆர்பி ரேங்கில் முதல் இடத்தை பிடிக்கும் தமிழா தமிழா
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் மிகவும் பரபரப்பாகிய ஓடிய நிகழ்ச்சி தான் “தமிழா தமிழா”. இந்த ஷோவில் விவாதிக்கப்படும் விடயங்கள் அனைத்தும் இன்றைய சமூகத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
இந்த நிலையில் கரு. பழனியப்பன் பிறந்த நாளான இன்று இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப்போவதாக அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, “எங்கெங்கோ இருந்து பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. அன்பு முத்தங்கள்” என பதிவிட தொடங்கிய அவர் பின்னர் ஒரு அதிர்ச்சியான செய்தியை அவருடைய ரசிகர்களுக்காக கொடுத்துள்ளார்.
கரு. பழனியப்பன் கூறிய அதிர்ச்சி தகவல்
மேலும், “இப்படி முகம் அறியாத முகங்களும், அவர்களின் அன்பும் தான் என்னை இவ்வளவு உயரத்திற்கு வழிக்காட்டியுள்ளது.
இன்றுடன் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான " தமிழா தமிழா" பயணம் நிறைவிற்கு வருகிறது. சுமார் 4 வருடங்கள் என்னுடன் இணைந்து பயணித்த அனைவருக்கும் நன்றிகள், சமூக நீதி, சுயமரியாதை , திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது” என குறிப்பிட்டு அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த கரு. பழனியப்பனின் ரசிகர்கள் இது குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
இவரின் இந்த முடிவிற்கு பின்னால் இருக்கும் காரணத்தை தெரிந்துக் கொள்ள ரசிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
@ZeeTamil உடனான நான்கு வருட" தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது.!சமூகநீதி,சுயமரியாதை,திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! .....
— கரு பழனியப்பன் (@karupalaniappan) March 7, 2023
நன்றி! @ZeeTamil @sijuprabhakaran ... pic.twitter.com/uxwQLfa66o