இந்த கீரையின் ஜூஸ் இல் முட்டை கலந்து குடிங்க - முடி தாறுமாறாக காடு போல வளரும்
உங்கள் தலைமுடியின் நீளத்தைப் பராமரிக்க விலைஉயர்ந்த கூந்தல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்தியும் துளியும் பலன் கிடைக்கவில்லையா?.
அப்படியானால், இயற்கையான அணுகுமுறையில் உங்கள் கூந்தல் பராமரிப்பு முறையில் புதிய கீரை இலைகளைச் சேர்த்து அதை கூந்தல் வளர்ச்சியில் பயன்படுத்தி பாருங்கள்.
இதற்கு கீரை மிகவும் எதவியாக இருக்கும். அதிலும் பாலக் கீரையில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி, இரும்புச்சத்து மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
அவை உங்களுக்கு ஆரோக்கியமான, நீண்ட முடியை உள்ளிருந்து பெற உதவுகின்றன. எனவே வீட்டிலிருந்தே முடி வளர்ச்சிக்கு பலாக் கீரையை பயன்படுத்தும் முறை பற்றி பற்றி பார்க்கலாம்.

நீண்ட முடி வளர்ச்சிக்கு பாலக்கீரை
பாலக் கீரை - பாலக் கீரை உங்கள் முடி நுண்குழாய்கள் மற்றும் உச்சந்தலையை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
இதற்கு 3 புதிய கீரை இலைகளுடன் 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, 5 நிமிடங்கள் கழித்து வடிகட்டி, ஆற வைத்து, காலையில் வெறு வயிற்றில் இதை குடிக்க வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் கூந்தல் வளர்ச்சியில் விரைவாக தெரியும்.

பசலைக் கீரை மற்றும் தயிர் - இதற்கு புதிய கீரை இலைகளை எடுத்து, 2 ஸ்பூன் புதிய தயிரைச் சேர்க்கவும். சுவைக்காக நீங்கள் சிறிது தேனையும் சேர்த்து கொள்ளலாம்.
இந்த கலவை முடியை வலுப்படுத்தி ஒட்டுமொத்த முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதை மதிய உணவிற்கு முன்னர் வாரத்திற்கு நான்கு முறை சாப்பிட்டு வந்தால் போதும்.

பசலைக் கீரை மற்றும் முட்டை - இதற்கு தண்ணீருடன் ஒரு புதிய கீரை எடுத்து அதை மிக்ஸியில் அரைத்து இதனுடன், 1 முட்டையைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது இதை காலை வெறும் வயிற்றில் நீங்கள் தினமும் காலையில் குடித்து வந்தால் முடி காடு போல வளரும். இந்த கலவை சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.
ஆனால் இது முற்றிலும் முடி வளர்ச்சியில் மாற்றம் தரும். இதில் புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது உங்கள் முடி நுண்குழாய்களுக்கு ஆக்ஸிஜனை வழங்கவும், இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் முடி உதிர்தலைத் தடுக்கவும் உதவுகிறது.

கீரையை உங்கள் தலைமுடி பராமரிப்பு வழக்கத்தில் ஒரு ஸ்கால்ப் மசாஜாகவும் சேர்த்துக்கொள்ளலாம். இதில் அதிக நீர்ச்சத்து இருப்பதால், உங்கள் உச்சந்தலையை நீரேற்றமாக வைத்திருக்கிறது மற்றும் முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |