டயட்டில் இருப்பவர்கள் இந்த கஞ்சி குடிங்க- பசி எடுக்காது.. பலன் நிச்சயம்
பொதுவாக இந்தியர்கள் காலையுணவாக எப்போதும் இட்லி, தோசை போன்றவற்றை தான் உணவாக எடுத்து கொள்வார்கள்.
அதில் சிலர் எடை அதிகரிப்பு பிரச்சினை காரணமாக காலையில் எளிதாக செரிமானத்திற்குள்ளாகும் உணவுகளை எடுப்பார்கள். இப்படியானவர்கள் காலை உணவாக கஞ்சி எடுத்து கொள்ளலாம்.
காலையில் வெறும் வயிற்றில் கஞ்சி குடித்தால் உடல் ஆரோக்கியத்தில் பாரிய மாற்றம் எற்படும்.
அத்துடன் உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் பிற சத்துக்களும் கிடைக்கும். கஞ்சி விரும்பிகளுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காது என பலரும் கூறுவார்கள் மற்றும் கஞ்சிக்கு ஊறுகாய் அல்லது தேங்காய் துவையல் சேர்த்து சாப்பிடலாம்.
இது அட்டகாசமான உணவாக இருக்கும். அப்படியாயின் உடல் எடையை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்கும் கஞ்சியை எப்படி தயாரிக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பச்சைப் பயறு கஞ்சி
தேவையான பொருட்கள்
* பச்சை பயறு - 1/2 கப்
* அரிசி - 1/2 கப்
* வெந்தயம் - 10
* பூண்டு - 4 பல்
* தண்ணீர் - 5 கப்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தயாரிப்பு முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் பச்சை பயறை எடுத்து, அதனுடன் 1/2 கப் அரிசியை சேர்த்து 2-3 முறை நன்றாக கழுவ வேண்டும்.
பின்பு ஒரு குக்கரில் பச்சை பயறு மற்றும் அரிசியை போட்டு 5-6 கப் நீரை ஊற்றி வேக வைக்க வேண்டும்.
வெந்து வரும் பொழுது அதில் 4 பல் பூண்டு, 10 வெந்தயம் சேர்த்து வேக வைக்கவும். 4-5 விசில் விட்டு இறக்கியதுடன், குக்கரைத் திறந்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கழுவ வேண்டும்.
இறுதியாக கஞ்சியின் சுவையைக் கூட்ட 1/4 கப் துருவிய தேங்காயை சேர்த்து கிளறினால், சுவையான பச்சைப் பயறு கஞ்சி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |