மின்சாரம் தாக்கி வலியால் துடிதுடித்த ஆந்தை! அடுத்து நடந்த சம்பவம்
மின்கம்பத்தில் அடிபட்ட அரியவகை ஆஸ்திரேலிய நாட்டு கூகை வகை ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரியில் லட்சுமி நகர் பகுதியில் இன்று அதிகாலை அரிய வகை ஆஸ்திரேலிய நாட்டு கூகை வகை ஆந்தை ஒன்று அங்கிருந்த மின்கம்பியில் அமர்ந்தபோது எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் அடிபட்டு பறக்க முடியாத நிலையில் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த அந்தப் பகுதியை சார்ந்த வழக்கறிஞர் கேசவன் என்பவர் அரியவகை ஆந்தை காயம் அடைந்ததை அறிந்து அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
அதனைத் தொடர்ந்து சிதம்பரம் வனத்துறை அதிகாரிகளுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்.
வருகைதந்த சிதம்பரம் வனத்துறையினர் அந்த அரியவகை ஆஸ்திரேலிய நாட்டு கூகை வகை ஆந்தையை அட்டை பெட்டியில் பத்திரமாக எடுத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் சிகிச்சை முடிந்தபின் ஆந்தையை அடர்ந்த காட்டுப்பகுதிகளில் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் இந்த ஆஸ்திரேலிய நாட்டு அரியவகை கூகை ஆந்தை உலக சந்தை மதிப்பில் 20 லட்சம் இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் அரியவகை ஆந்தை எப்படி அந்த பகுதிக்கு வந்தது என்றும் மின்கம்பியில் அடிபட்டதால் அல்லது மர்ம நபர்கள் யாரேனும் காயப்படுத்தினார்கள் என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஆஸ்திரேலிய நாட்டு அரியவகை ஆந்தை புவனகிரி பகுதியில் காயத்துடன் மீட்கப்பட்டது அந்தப் பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான் அவரை காதலிக்கிறேன்! முன்னாள் கணவர் குறித்து உருக்கமாக பேசிய நளினி