உங்கள் மகனுக்கு முதலி ஒழுக்கத்தை கற்றுக்கொடுங்கள்.. ஓவியாவின் ட்வீட்டின் சர்ச்சை!
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்க இடம்பிடித்திருந்தவர் தான் நடிகை ஓவியா. விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஓவியா அந்த படத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
இதையடுத்து, சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீப காலமாகவே மோடி அரசுக்கு எதிராக ட்வீட் போட்டு வருகிறார்.
இந்நிலையில், மீ டூ விவகாரத்தில் இவர் போட்ட பதிவு விவாத பொருளாக மாறியுள்ளது. அந்த பதிவில், உங்கள் மகள்களுக்கு தற்காப்பு மற்றும் #Metoo பற்றி சொல்லிக்கொடுப்பதற்கு பதிலாக உங்கள் மகனுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுங்கள் என்று பதிவிட்டு இருந்தார்.
மேலும், ஓவியாவின் இந்த கருத்தை சிலர் ஏற்றாலும் ஒரு சிலரோ எல்லா பெண்களும் ஒழுங்கு கிடையாது. ஆண்களை மட்டும் குறை சொல்வது என்ன நியாயம் என்று பதிவிட்டு வருகின்றனர்.
