இந்த 5 மூலிகைகள் போதும்! பாடாய்படுத்தும் தலைவலி நிமிடத்தில் பறந்தோடும்
பொதுவாக நாம் அனைவருக்கும் தலைவலி வருவது சாதாரணமான ஒன்றுதான். ஆனால், அது அதிகமானால் யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது. வேலை அதிகமானாலோ, தூக்கமின்மை இருந்தாலோ தலைவலி ஏற்படுகிறது.
சில நேரங்களில் நாம் தலைவலிக்கு மருந்துகளை பயன்படுத்துகிறோம். ஆனால், அந்த மருந்து அதிகமானால் பக்க விளைவுகள் ஏற்பட்டு தீங்கு விளைவிக்கிறது.
தலைவலிக்கு இயற்கையான மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் நமக்கு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை. அதற்கான இயற்கை மூலிகைகளை தான் நாம் பார்க்க போகிறோம்.
வேப்ப இலைகள்
பொதுவாக வேப்ப இலைகள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இதில், ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. வேப்ப இலையானது, வயிற்று பிரச்சனைக்கும், புண் போன்றவற்றிற்கும் சிறந்த தீர்வாக உள்ளது. தலைவலி ஏற்படும் போது வேப்ப எண்ணெயை பயன்படுத்தினால் வலி போய்விடும்.
வேப்ப எண்ணெய் இல்லாத சமயத்தில், தேங்காய் எண்ணெயில் வேப்ப இலைகளை போட்டு வெயிலில் வைத்து அதை பயன்படுத்தினால் தலைவலி போகும்.
மருதாணி இலைகள்
விழாக்காலங்களில் மருதாணி இலைகளை அரைத்து கைகளில் வைப்பது பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாகும். சில பேர், நரை முடி உள்ள இடங்களில் ஹேர் டையாகவும் மருதாணி இலைகளை அரைத்து பயன்படுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், மருதாணி இலையானது தலைவலிக்கு நிவாரணமாக உள்ளது. மருதாணி இலைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலையில், இலைகளை நீக்கி விட்டு தண்ணீரை குடிக்க வேண்டும். இந்த நீரை குடிக்க விருப்பம் இல்லாதவர்கள் மருதாணி இலைகளை அரைத்து தலையில் தேய்த்துக் கொள்ளலாம். இதனால், உடல் குளிர்ச்சி அடைவது மட்டுமல்லாமல், தலைவலியும் நீங்கி விடும்.
கற்றாழை ஜெல்
அழகு குறிப்புகளில் முக்கியமான ஒன்று கற்றாழை. இந்த கற்றாழை ஜெல்லை நெற்றி மீது தடவ வேண்டும். இதில் உள்ள தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் பெற உதவுகின்றன.
கற்றாழை ஜெல்லில், இரண்டு துளி கிராம்பு எண்ணெய் மற்றும் சிறிது மஞ்சள் தூள் கலந்து நெற்றியில் தடவி 20 நிமிடம் வைக்க வேண்டும். கற்றாழையில் உள்ள குளிர்விக்கும் தன்மை தலைவலியில் இருந்து விடுபட வைக்கும்.
புதினா இலைகள் அல்லது புதினா எண்ணெய்
புதினாவில் பாக்டீரியா எதிர்ப்பு, கிருமி நாசினிகள் போன்றவை வலி நிவாரணத்திற்கு உதவுகின்றன. மன அழுத்தம் மற்றும் வானிலை மாற்றங்களினால் தலைவலி ஏற்பட்டால் புதினா இலைகளை அரைத்து நெற்றியில் தடவலாம், அல்லது புதினா எண்ணெயை பயன்படுத்தலாம்.
வில்லோ பட்டை
தலைவலிக்கு சிறந்த நிவாரணத்திற்கு ஒன்று வில்லோ பட்டை. வில்லோ மரங்களில் உள்ள பட்டையை டீ போட்டு குடித்தால் தலைவலி நீங்கிவிடும். வில்லோ பட்டையை, துளசி டீ போன்ற டீ வகைகளில் சேர்த்து பயன்படுத்தினால் தலைவலிக்கு சிறந்த நிவாரணமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |