அதிகமாக சாப்பிடுறீங்களா?...மூளை பாதிக்குமாம்
ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
அதேசமயம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல, அதிகமான உணவும் நம் உடலுக்கு பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.
உண்ண வேண்டும் என்பதற்காக எந்நேரமும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்றில்லை.
image - The ripple club
உண்மையில் கூறப்போனால் 3 வேளைதான் உணவுக்கான நேரமே. அதைவிடுத்து சிலர் 5 வேளை, 6 வேளை என தனக்கு தோணும்போதேல்லாம் உண்கின்றார்கள்.
அடிக்கடி சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்பு முக்கிய காரணியாக காணப்படுகின்றது. இதனால் அதிக கொழுப்பு உடலுக்குள் சேர்கிறது.
நமக்கு மிகவும் பிடித்த உணவுகள் நம் கண்முன்னே இருக்கும் பொழுது, வயிறு நிரம்பியிருந்தாலும் நிச்சயம் சாப்பிடத்தான் தோணும். சாப்பிடுவோம்.
image - center for family medicine
இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா என்ன கூறுகிறார் என்றால், 'வயிறு நிரம்பியதாக உணர்கிறீர்கள் என்பதை கவனிக்காமல் இருந்தால், குறிப்பிட்ட அளவையும் மீறி உண்ண நேரிடுகிறது. உண்மையில் இந்தப் பழக்கமானது, குமட்டல், வாயு போன்ற பல நோய்களுக்கு வழி வகுக்கிறது' என்கிறார்.
அதிகமாக உண்பதால் என்ன நடக்கும்?
- மூளை செயல்பாடு பாதிக்கப்படுகிறது.
- அதிகப்படியான கொழுப்பு சேர்கிறது.
- மந்தமாக உணர வைக்கிறது.
- பசி ஒழுங்குமுறையை சீர்குலைக்கிறது.
- அதிக வாயு,வீக்கம் என்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
- நோய் பாதிப்பை அதிகப்படுத்துகிறது.
image - arbor councelling center
அதிகமாக உண்பதை எவ்வாறு தடுக்கலாம்?
- பிடித்த உணவுகள் கண்முன் இருக்கும் பொழுது மனதைக் கட்டுப்படுத்த பழக வேண்டும்.
- ஏதாவது சாப்பிடவேண்டும் போலிருந்தால் புரதம், நார்ச்சத்து நிரம்பிய உணவுகளை உண்ணுங்கள்.
- பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைவாக உட்கொள்ளவும்.
சத்தான உணவுகளை பெரும்பாலும் உண்ணுங்கள்.