Viral Video: பெரிய மீனை பிடித்து பறக்க முடியாமல் நின்ற கழுகு... கடைசியில் நடந்தது என்ன?
கழுகு ஒன்று மிகப்பெரிய மீனுடன் உயரே பறந்த நிலையில், எதிர்பாராத நிலையில், மீன் தண்ணீருக்குள் விழுந்து தப்பித்துள்ளது.
கழுகின் மீன் வேட்டை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்து வரும் நிலையில், தற்போதும் கழுகின் மீன் வேட்டை காட்சியே இதுவாகும்.

கழுகுபார்வை என்பதற்கான அர்த்தத்தினை தனது செயலிலனால் வெளிக்காட்டியுள்ள கழுகின் செயலை தான் பார்க்கப் போகின்றோம்.
இங்கு கழுகு ஒன்று பாறையில் அமர்ந்தவாறு இருக்கின்றது. திடீரென்று அது எழும்பும் போது அது தன் காலில் ஒரு பெரிய மீன் ஒன்றை பிடித்திருப்பது தெரியவந்துள்ளது.
அது மிகவும் பெரிய மீனாக இருப்பதால் அதால் அதை மேலே பறக்க முடியவில்லை. இதனால் அது சிறிது நேரம் அதை அருகில் இருந்த பாறை மீது வைத்து பிறகு மேலே பறக்கிறது.