இந்த படத்தில் முதலில் உங்க கண்ணுக்கு என்ன தெரிந்தது? உங்க பலமே இதுதானாம்
ஒருவரது குணாதிசயங்களை புதிர் நிறைந்த படங்கள் மூலமாக கண்டுபிடிக்கலாம். இதற்கு பெயர் தான் ஆப்டிகல் இல்யூஷன் ஆகும்.
அதாவது ஒருவரது குணாதிசயங்கள், பலம் மற்றும் பலவீனம், சிந்திக்கும் திறன் இவற்றினை ஒரே ஒரு புகைப்படத்தினை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த வகையான படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அறிவுத்திறனைப் பற்றியும் வெளிப்படுத்தும்.
அதாவது ஒரு படத்தினை நாம் அவதானித்தால், ஒவ்வொருவரின் கண்களுக்கு ஒவ்வொரு விதமாக தெரியும். இவ்வாறு தென்படும் விடயங்களை வைத்து, நீங்கள் உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களது கண்ணோட்டம் எப்படி இருக்கின்றது என்பதை தெரியபடுத்துகின்றது.
மேலும் ஆப்டிகல் இல்யூஷன் படமானது ஒருவரது வலது மூளை அல்லது இடது மூளையின் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படுத்துகின்றன.
நீங்கள் உங்களின் எந்த மூளை சுறுசுறுப்பாக உள்ளது தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.
ஒரு சிறுமி
குறித்த புகைப்படத்தில் உங்களது கண்களுக்கு சிறுமியின் உருவம் முதலில் தெரிந்தால், நீங்கள் எல்லாவற்றையும் எளிதில் எதிர்கொள்வதுடன், தன்னம்பிக்கையுடனும் இருப்பீர்கள். பிரச்சனையை வித்தியாசமாக பார்க்கும் விதம் உங்களிடம் இருப்பதால் விரைவில் பிரச்சனையிலிருந்து வெளிவந்துவிடுவீர்கள்.
மண்டைஓடு
குறித்த புகைப்படத்தில் உங்களது கண்களுக்கு முதலில் மண்டை ஓடு தெரிந்தால் நீங்கள் ஒரு ஆழ்ந்த சிந்தனையாளராக இருப்பீர்கள். உங்களது பலமே உங்களது புத்திசாலித்தனம் மற்றும் சிந்திக்கும் திறன் தான். மண்டைஓடு இறப்பையும், பலவீனத்தையும் குறிப்பதாக பலரும் நினைத்தாலும், உண்மையில் மனவலிமையைக் குறிப்பது ஆகும்.
காடு
உங்களது கண்களுக்கு முதலில் காடு தெரிந்தால் நீங்கள் உங்களின் உள்ளுணர்வு கூறுவதை அதிகம் பின்பற்றுவதுடன், அதனை முழுமையாகவும் நம்புவீர்கள். உங்களின் நம்பிக்கைக்கு ஏற்ப உங்களின் உள்ளுணர்வும் சிறப்பான வாழ்க்கையை வாழ உங்களுக்கு வழிநடத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |