இந்த புகைப்படத்தில் முதலில் உங்க கண்ணுக்கு தெரிந்தது என்ன? மோசமான குணம் இதுதான்
ஒருவரது குணாதிசயங்களை புதிர் நிறைந்த படங்கள் மூலமாக கண்டுபிடிக்கலாம். இதற்கு பெயர் தான் ஆப்டிகல் இல்யூஷன் ஆகும்.
அதாவது ஒருவரது குணாதிசயங்கள், பலம் மற்றும் பலவீனம், சிந்திக்கும் திறன் இவற்றினை ஒரே ஒரு புகைப்படத்தினை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த வகையான படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அறிவுத்திறனைப் பற்றியும் வெளிப்படுத்தும்.
அதாவது ஒரு படத்தினை நாம் அவதானித்தால், ஒவ்வொருவரின் கண்களுக்கு ஒவ்வொரு விதமாக தெரியும். இவ்வாறு தென்படும் விடயங்களை வைத்து, நீங்கள் உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களது கண்ணோட்டம் எப்படி இருக்கின்றது என்பதை தெரியபடுத்துகின்றது.
மேலும் ஆப்டிகல் இல்யூஷன் படமானது ஒருவரது வலது மூளை அல்லது இடது மூளையின் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படுத்துகின்றன.
நீங்கள் உங்களின் எந்த மூளை சுறுசுறுப்பாக உள்ளது தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.
பெண்
இந்த புகைப்படத்தில் உங்களது கண்களுக்கு பெண் தெரிந்தால் மோசமான குணம் ஒன்று உங்களிடம் உள்ளதாம். அது என்னவெனில், ஒருவரை வெளிப்புறத் தோற்றத்தை கொண்டே நீங்கள் எடை போடுவதுடன், அவர் இப்படித்தான் என்று முடிவும் எடுப்பீர்கள்.
நதி
குறித்த புகைப்படத்தில் நதி இருந்தது என்றால், உங்களிடம் இருக்கும் மோசமான குணம் என்னவெனில், ஒருவர் சமூகத்தில் எப்படி இருக்கின்றார் என்பதைவிட ஒருவரது வெற்றியும், புகழும் தான் உங்களை கவருமாம். லட்சியம் கொண்டவர்களை மதிப்பது சிறந்தது என்றாலும், ஒருவரை அவரது வெற்றியின் அடிப்படையில் மட்டுமே மதிப்பது என்பது மோசமான குணம்.
பாலம்
உங்களது கண்களுக்கு பாலம் தெரிந்தால், யாருக்கும் கருணை காட்டாத மோசமான குணம் உங்களிடம் இருக்குமாம். மற்றவர்களின் கண்களுக்கு இதயமற்றவராக தெரிவீர்கள்.
படகு
குறித்த புகைப்படத்தில் உங்களது கண்களுக்கு படகு தெரிந்தால், உங்களிடம் உள்ள மோசமான குணம் என்னவெனில், உங்களுக்கு மட்டுமே நீங்கள் அதிக முக்கியத்துவத்தைக் கொடுப்பதுடன், எந்தவொரு விடயத்திலும் உங்களைப் பற்றி மட்டுமே யோசிப்பவராகவும், மற்றவர்களுக்கு என்ன நடக்கும் என்ற கவலை சற்றும் உங்களிடம் இருக்காதாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |