இந்த புகைப்படத்தில் முதலில் உங்களுக்கு தெரிந்தது என்ன? உஷாரா இருந்துக்கோங்க
ஒருவரது குணாதிசயங்களை புதிர் நிறைந்த படங்கள் மூலமாக கண்டுபிடிக்கலாம். இதற்கு பெயர் தான் ஆப்டிகல் இல்யூஷன் ஆகும்.
அதாவது ஒருவரது குணாதிசயங்கள், பலம் மற்றும் பலவீனம், சிந்திக்கும் திறன் இவற்றினை ஒரே ஒரு புகைப்படத்தினை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த வகையான படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அறிவுத்திறனைப் பற்றியும் வெளிப்படுத்தும்.
அதாவது ஒரு படத்தினை நாம் அவதானித்தால், ஒவ்வொருவரின் கண்களுக்கு ஒவ்வொரு விதமாக தெரியும். இவ்வாறு தென்படும் விடயங்களை வைத்து, நீங்கள் உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களது கண்ணோட்டம் எப்படி இருக்கின்றது என்பதை தெரியபடுத்துகின்றது.
மேலும் ஆப்டிகல் இல்யூஷன் படமானது ஒருவரது வலது மூளை அல்லது இடது மூளையின் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படுத்துகின்றன.
நீங்கள் உங்களின் எந்த மூளை சுறுசுறுப்பாக உள்ளது தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.
கண்
குறித்த புகைப்படத்தில் உங்களுக்கு முதலாவதாக கண் தெரிந்தால், உங்கள் இலக்குகளை அடைவதில் அக்கறையும், எதிர்காலத்தை குறித்த திட்டத்தினை சிந்திக்கவும் செய்வீர்கள். எதிர்காலத்தை குறித்து அதிக கவலை கொள்ளும் நீங்கள் கடினமாக உழைப்பவராக இருப்பீர்கள்.
உங்களின் படைப்பாற்றல் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வர விரும்புவதுடன், அந்த மாற்றம் உங்களை சங்கடப்படுத்தவும் செய்யும். எப்பொழுதும் சௌகரியமான பகுதியில் தான் இருக்க விரும்புவீர்கள்.
பள்ளம்
இந்த புகைப்படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மரங்களால் சூழப்பட்ட பள்ளம் தெரிந்தது என்றால், நீங்கள் உணர்ச்சிவசப்படுபவராகவும், மற்றவர்களை மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்வீர்கள்.
மற்றவர்களின் மனம் புண்படும்படி ஒருபோதும் பேசாமல் இருக்கும் நீங்கள், மற்றவர்களிடம் உங்களுக்கென்று இருக்கும் எல்லையை ஒருபோதும் தாண்ட மாட்டீர்கள். மற்றவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், உங்களை லேசாக புண்படுத்திவிட்டால், அனை நினைத்து அதிகம் வருத்தப்படுவீர்கள்.
ஆனால் உங்கள் நண்பர்கள் உங்களை அதிகமாக கட்டுப்படுத்தாமல் பார்த்துக் கொள்வது நல்லது. நீங்கள் மற்றவர்களால் எளிதில் திசைதிருப்பப்படுவீர்கள். ஒரு முடிவை எடுப்பது என்பது உங்களுக்கு சவாலானதாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |