உங்க துணை பற்றிய உண்மையை கண்டுபிடிக்க ஒரு Test: முதலில் கண்ணுக்கு தெரிவது என்ன?
சமீபக் காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும்.
இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. படகு
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் போது உங்களுடைய கண்களுக்கு படகு இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் ஒரு விஷயத்தை ஆழமாக பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
- சிறந்த படைப்பாற்றல், புத்திசாலித்தனம் மற்றும் தனித்துவமான குணாதிசயம் உங்களிடம் இருக்கும்.
- இதனை காரணமாக வைத்து மற்றவர்கள் உங்களிடம் பழக வருவார்கள்.
- எப்பேற்பட்ட சிக்கலையும் திறம்பட கையாண்டு தீர்க்கும் தைரியம் உங்களிடம் இருக்கும்.
- பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
- ஒரு சிறிய விஷயத்திற்கு கூர்மையான கண்ணோட்டம் வைப்பதால் அதிகமான நேரம் செலவிடுவீர்கள்.
- இதனால் உடல் ரீதியிலான பிரச்சினைகள் மற்றும் மனநிலையில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
2. முதலை
- படத்தை பார்க்கும் போது முதலில் கண்களுக்கு முதலை இருப்பது போன்று தெரிந்தால் உஷாரான நபராக இருப்பீர்கள்.
- எந்த விஷயத்திலும் திறம்பட திட்டம் தீட்டுவீர்கள். சிறப்பான முடிவுகளை எடுப்பதிலும் வல்லவர்களாக இருப்பீர்கள்.
- எப்படியான சிக்கல்கள் வந்தாலும் அதனை திறம்பட கையாளும் திறன் உங்களிடம் இருக்கும்.
- எப்போதும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே இருப்பீர்கள்.
- உங்களின் நடைமுறை இயல்பு வாழ்க்கை முறையில் இருக்கும்.
-
மற்றவர்களுக்கு உதவிச் செய்யும் குணம் உங்களிடம் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |