இதில் உங்களுக்கு பிடித்த கதவு எது? ஆழமான ரகசியம் இதோ
உங்களது கண்களுக்கு இந்த படத்தில் இருக்கும் கதவுகளில் எந்த கதவு பிடித்துள்ளது என்பதை வைத்து குணாதிசயங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஒருவரது குணாதிசயங்களை புதிர் நிறைந்த படங்கள் மூலமாக கண்டுபிடிக்கலாம். இதற்கு பெயர் தான் ஆப்டிகல் இல்யூஷன் ஆகும்.
அதாவது ஒருவரது குணாதிசயங்கள், பலம் மற்றும் பலவீனம், சிந்திக்கும் திறன் இவற்றினை ஒரே ஒரு புகைப்படத்தினை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த வகையான படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அறிவுத்திறனைப் பற்றியும் வெளிப்படுத்தும்.
அதாவது ஒரு படத்தினை நாம் அவதானித்தால், ஒவ்வொருவரின் கண்களுக்கு ஒவ்வொரு விதமாக தெரியும்.
இவ்வாறு தென்படும் விடயங்களை வைத்து, நீங்கள் உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களது கண்ணோட்டம் எப்படி இருக்கின்றது என்பதை தெரியப்படுத்துகின்றது.
பச்சை நிற கதவு
குறித்த படத்தில் பச்சை நிற கதவு பிடித்திருந்தால், இயற்கை, நிலைத்தன்மை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியுடன் ஆழமாக இணைந்திருப்பீர்கள்.
பொருளை விட உறவுகளையும், நல்வாழ்வையும் மதிக்கும் நீங்கள், நடைமுறைக்கு ஏற்ற நபராக இருப்பீர்கள். மற்றவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்பதுடன், அமைதியான நடத்தை மற்றவர்களுக்கு உங்களுக்கு அதிகமாகவே பிடிக்கும். பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பது உங்களது பலமாகும்.
நீல நிற கதவு
குறித்த படத்தில் உங்களுக்கு நீல நிற கதவு பிடித்திருந்தால், நீங்கள் சிந்தனையாளர், அறிவார்ந்த மற்றும் படைப்பாற்றல் மிக்க நபராகவும், சுதந்திரமாக செயல்பட விரும்புபவராகவும் இருப்பீர்கள்.
மேலும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்களாக இருக்கும் நீங்கள், ஆழமான உரையாடல்களை விரும்புவீர்கள்.
உங்களது எல்லைகளை எப்பொழுதும் விரிவுபடுத்த விரும்புவீர்கள். உங்களின் பலம் சிக்கலான பிரச்சினைகளை சுமூகமாக சிந்தித்து தீர்த்துவிடுவீர்கள்.
சிவப்பு நிற கதவு
குறித்த படத்தில் உங்களுக்கு சிவப்பு நிற கதவு பிடித்திருந்தால், துணிச்சலானவராகவும், தன்னம்பிக்கை, அச்சமற்றவராகவும் இருப்பீர்கள்.
சிவப்பு நிறம் உறுதிபாட்டையும், வலுவான உணர்ச்சிகளையும் குறிக்கும் நிலையில், நீங்களும் சவால்களை துணிந்து எதிர்கொள்ளவும் செய்வீர்கள்.
உங்கள் இலக்குகளை அடைய ரிஸ்ட் எடுக்க சற்றும் பயப்படாத நீங்கள், உங்களின் வலுவான மன உறுதியே தடைகளை தன்னம்பிக்கையுடன் கடந்து செல்ல உதவுகின்றது. இதுவே உங்களது மிகப்பெரிய பலனாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |