தூங்கிக் கொண்டிருக்கும் போதும் இப்படியா தொல்லை கொடுப்பது? ரவீந்தர் குறித்து மகாலக்ஷ்மி ஓபன் டாக்
சீரியல் நடிகை மகாலட்சுமி தனது கணவர் தூக்கத்தில் கூட எழுப்பி தனக்கு கொடுக்கும் அன்புத் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகை மகாலட்சுமி
கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்திரரை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார் மகாலட்சுமி. அவ்வப்போது நெட்டிசன்களுக்கு தீனி போட்டும் வருகின்றனர்.
தன்னை பலரும் உருவக்கேலி செய்துவந்தாலும், எந்தவொரு கவலையும் இல்லாமல் குறித்த தம்பிகள் மாறி மாறி அன்பை பரிமாறி புகைப்படம் வெளியிட்டிருந்தது.
சமீபத்தில் ரவீந்தர் மோசடி புகார் ஒன்றிலும் சிக்கியதோடு, சிறைக்கு சென்று தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் மகாலட்சுமி ரவீந்தர் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
மகாலட்சுமி பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகின்றார். விஜேவாக தனது வேலையை ஆரம்பித்த இவர் முழுநேரமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறுகையில், ரவீந்தரின் உடல் எடையை குறைக்க பல முயற்சி செய்து வரும் நிலையில், அவர் முறையான டயட்டை பின்பற்றுவது கிடையாதாம்.
ரவீந்தருடன் மகாலட்சுமி இருப்பதால் அவராலும் டயட்டை ஒழுங்காக பின்ன பற்ற முடியவில்லையாம். மேலும் மகாலட்சுமி தனது டயட்டை தொடர வேண்டும் என்று நினைத்தாலும், தூங்கிக் கொண்டிருக்கும் போது கூட இவரை எழுப்பி ரவீந்தர் சாப்பிட வைத்துவிடுவாராம். தான் அதிகமாக சாப்பிட மாட்டேன்... அதே வேலை சாப்பிட ஆரம்பித்தால் முழுவதுமாக சாப்பிட ஆரம்பித்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.
ரவீந்தர் சிறைக்கு சென்று தனது உடல் எடையினால் கடும் அவதிப்பட்ட நிலையில், இனியாவது டயட் இருந்து உடல் எடையைக் குறைக்க ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |