நாட்டுப்புறப் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
பருத்திவீரன் படத்தில் இடம்பெற்ற ஊரோரம் புளியமரம் பாடலைப் பாடிய பாடகி மரணமடைந்துள்ளார்.
லட்சுமி அம்மாள்
தமிழ் சினிமாவில் கிராமிய இசைக்கு உயிரூட்டிய மூத்த நாட்டுப்புறப் பாடகி லட்சுமி அம்மாள் (75) இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், தென் மாவட்டங்களில் மேடை நிகழ்ச்சிகள் வழியாகப் பெரும் புகழ் பெற்ற ஒரு முக்கியமான நாட்டுப்புறக் கலைஞராக அறியப்பட்டவர்.
நூற்றுக்கணக்கான கிராமியப் பாடல்களை மேடைகளில் பாடி அதிகமான ரசிகர்களை தன்வயப்படுத்தி வைத்துள்ளார். இவரின் திறமையறிந்து இவரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் அமீர்.

2007-ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில், கார்த்தி மற்றும் சரவணன் நடனமாடிய “ஊரோரம் புளியமரம்” என்ற பாடலை பாடி இருந்தார். இதனால் உலகத் தமிழர்கள் மத்தியில் அவா பிரபலமானார்.
சமீப காலமாக முதுமை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் பலரும், திரைத்துறையினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கிராமிய இசையின் ஒரு முக்கியமான குரலாக இருந்து வந்தவர் லட்சுமி அம்மாள், அவரது இழப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |