மொறு மொறு வெண்டைக்காய் வறுவல் நொடியில் செய்யலாம்... எப்படி தெரியுமா?
வெண்டைக்காயை மொறு மொறுவென வறுவல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
சைவ பிரியர்களுக்கு மட்டும் இல்லை. அசைவ பிரியர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
சரி எப்படி அதை செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெண்டைக்காய் - 25
- கடலை மாவு - 2 தேகரண்டி
- அரிசி மாவு - 1 தேகரண்டி
- சோள மாவு - 1 தேகரண்டி
- மிளகாய் தூள் - 1 1/2 தேகரண்டி
- கரம் மசலா - 1 தேகரண்டி
- மிளகுத்தூள் - 1/2 தேகரண்டி
- உப்பு - தே.அ
- எண்ணெய் - வறுக்க
செய்முறை
வெண்டைக்காய்களை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின் அவற்றை இரண்டாக நறுக்கி நீள வாக்கில் சிப்ஸ் போல் நறுக்கிக்கொள்ளுங்கள்.
பின் வெண்டைக்காயை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு என கொடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் சேருங்கள்.
பின் சில துளி நீர் தெளித்து மசாலா சேருமாறு பிசைந்துகொள்ளுங்கள்.
பின் கடாய் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெண்டைக்காயை தூவி விட்டு பொன்னிறமாக பொறித்து எடுங்கள்.
அவ்வளவுதான் வெண்டைக்காய் வறுவல் தயார்.