ஒருவர் பான் கார்டு வைத்திருக்கலாம்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க ஆபத்துல சிக்கிக்காதீங்க
இன்று பெரும்பாலான மக்களுக்கு பான் கார்டு முக்கிய அட்டையாக இருந்து வருகின்றது. ஒருவர் எத்தனை பான் கார்டு வைத்திருக்கலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பான் கார்டு
நபர் ஒருவர் தனது வருமான வரி செலுத்தவும், தனிநபரின் வருமானத்தைக் கணக்கில் காண்பிக்கவும் பயன்படுத்தப்படும் அட்டை தான் பான் கார்டு ஆகும்.
இதில் இருக்கும் எண் நிரந்தர அடையாள எண்ணாகவும், ஒருவரது பணபரிவர்த்தனையை கண்காணிக்க அவசியமாக இருக்கின்றது.
ஒவ்வொரு நபர்களுக்கு ஒரு பான் கார்டு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு பயன்படுத்துவது தண்டனைக்குறிய குற்றமாகும்.
எனவே தனிநபர் பெயரில் ஒரே ஒரு பான் கார்டு மட்டும் வைத்துக்கொள்வது நல்லது. அதிகமான பான் கார்டு வைத்திருப்பவர்கள் மீது வருமான வரிச்சட்டம்1961 இன் பிரிவு 272B இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.