இப்படியும் ஒரு ஆடையா! ஒரு காலில் ஜீன்ஸ் இன்னொரு காலில் டவுசர்: விலை எவ்வளவு தெரியுமா?
தற்காலத்தை பொருத்தவரையில் நாளாந்தம் ஏதாவது ஒரு விடயம் இணையத்தில் டிரண்டாகிவிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது டிரண்டாகியுள்ளது தான் ஒன்றை கால் ஜீன்ஸ். இந்த ஜீனஸை பலரும் வியந்து பார்க்கும் அதே நேரத்தில் பலரும் அதனை விமர்சித்து பல்வேறு விதமான கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
பொதுவாகவே இன்றைய கால இளைஞர்களுக்கு வித்தியாசமான கண்டுப்பிடிப்புகள் மீதும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும் விடயங்கள் மீதும் தனி விரும்பம் ஏற்படுவது சாதாரண விடயம் தான்.
ஆனால் டிரண்டாக இருக்கிறது என்று இளைஞர்கள் எதையாவது வாங்கினால், அவர்களின் பெற்றோர்கள் இதெல்லாம் ஒரு டிரண்டா என்று அலட்சியமாக சொல்லிவிடுவார்கள். காரணம் அர்த்தமற்ற மற்றும் தேவையற்ற விடயங்கள் தான் வித்தியாசமான முறையில் சந்தைப்படுத்தப்படுகின்றது.
அப்படி தற்காலத்தில் பிரபல்யமாக இருக்கும் விடயங்களில் ஒன்று , டோன்ட் ஜீன்ஸ், அதாவது ஜீனில் அங்கங்கே கிழிந்து இருக்கும். இது ஒரு டிரண்ட். இதனை நாம் வாங்கினால், கிழிந்த பேண்டுக்கு இவ்வளவு பணம் கொடுத்து வாங்கியதற்கு பெற்றோர்களிடம் திட்டு வாங்கவேண்டியிருக்கும்.
அப்படி இருக்கையில், இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று ஒன்றை கால் ஜீன்ஸை தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.
இதுவரையில் ஜீன்ஸ் என்றால், முழுமையாகத்தான் பார்த்திருப்பீர்கள். அதேசமயம் அரைகால் டவுசரும் ஜீன்ஸில் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதை இரண்டையும் இணைத்து வித்தியாசமான முறையில் ஒருவர் உருவாக்கியிருப்பது தான் இந்த ஒன்றைக் கால் ஜீன்ஸ்.
விலை எவ்வளவு?
இதன் விலை கேட்டால் பெரும்பாலானவர்கள் வாயடைத்துப்போய் விடுவார்கள். இந்த ஒன்றைக் கால் ஜீன்ஸ் 440 டாலர் என்று குறிப்பிடப்படுகின்றது.
இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ.38,000 என கூறப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் தான் இந்த ஜீன்ஸ் கிடைக்கின்றதாம்.
அந்நாட்டை சேர்ந்த கோபர்னி என்ற நிறுவனம் இந்த ஜீன்ஸை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளதாக அறியப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |