அரண்மனையில் பிரம்மாண்டமாக நடக்கும் ஹன்சிகாவின் திருமணம்! ஒரு நாள் வாடகை மட்டுமே இவ்வளவா?
நடிகை ஹன்சிகாவின் திருமணம் நடைபெறவுள்ள அரண்மனையின் வாடகை விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
சோஹேல் கதூரியா என்பவரை டிசம்பர் 4 ஆம் திகதி நடிகை ஹன்சிகா திருமணம் செய்துக்கொள்ள உள்ளார்.
தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற படம் மூலம் அறிமுகமான நடிகை ஹன்சிகா முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு மற்றும் தமிழில் தொடர்ந்தும் பல படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை ஹன்சிகா திருமணம்
இதேவேளை, திடீரென்று ஹன்சிகா மும்பையை சேர்ந்த சோஹேல் என்பவரை திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில் ஹன்சிகாவின் திருமணம் நடக்கவுள்ள அரண்மனையின் வாடகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
முண்டோட்டா அரண்மனையின் ஒரு நாள் வாடகை
ஜெய்ப்பூர் அருகே உள்ள முண்டோட்டா என்கிற 450 ஆண்டு காலம் பழமைவாய்ந்த அரண்மனையில் திருமணம் நடைபெறவுள்ளது.
இந்த அரண்மனையில் ஒரு நாள் இரவு தங்க ரூ. 60 ஆயிரம் வசூலிக்கப்படுகிறதாம்.
சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த அரண்மனை தற்போது 5 ஸ்டார் ஓட்டலை போல் அற்புதமான முறையில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.