வசூலை வாரி குவிக்கும் அமரன் நாயகன் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்யும் ஒரே ஒரு பிரபலம்... யார் தெரியுமா?
தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர் சிவகார்த்திகேயன்.
நடிகர் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமா துறையில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தவர் இவர். குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டுள்ளார்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ரசிகர்கள் இருக்கின்றார்கள். எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான், பிரின்ஸ், மாவீரன் ஆகிய பல படங்களில் சூப்பர் ஹிட் கொடுத்து புகழின் உச்சத்தில் இருக்கின்றார்.
அமரன்
இவருடைய மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமரம் வெற்றிநடை போட்டு வருகின்றது. தீபாவளி வெளியீடாக வெளிவந்த இப்படம் இதுவரை அவருடைய திரை வாழ்க்கையில் எந்த ஒரு படமும் செய்யாத வசூல் சாதனைகளை செய்து வருககின்றது.

சுமார் 13 நாட்களில் ஏரதாழ 250 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை செய்து வருகின்றது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி உலகளவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் சிவகார்த்திகேயனை இன்ஸ்டாவில் 7.6 மில்லியன் பேர் பாலோ செய்கின்றனர்.
ஆனால் இவர் இன்ஸ்டாவில் பாலோ செய்யும் ஒரேஒரு நபர் அவரது மனைவி ஆர்த்தி சிவகார்திகேயன் தான்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        