கொரோனாவின் 4வது அலை! தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்யலாம்?
கொரோனா தொற்றிலிருந்து உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள பயங்கரமாக திணறி வரும் நிலையில், தற்போது 4வது அலையின் தாக்கம் மக்களை பெரும் பயத்தினை ஏற்படுத்தி வருகின்றது.
குழந்தைகளுக்கு அதிகமாக பரவுமா?
பெரியவர்களைப் போல் அல்லாமல், கோவிட்-19 க்கு எதிரான செயற்கை நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் நாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நேரடி வகுப்புகளை தொடங்கியுள்ள நிலையில், தங்கள் குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது.
இந்நிலையில், தடுப்பூசி போடப்படாத குழந்தைகளை ஒமைக்ரான் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சில வழிமுறைகள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
வெறும் 30 நாட்களில் தலைமுடி அடர்த்தியாக வளரணுமா? சூப்பரான டிப்ஸ் உங்களுக்காக
குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து
உங்கள் குழந்தைகள் வெளியே செல்லும்போது அவர்களுக்கு சிறந்த, மேம்படுத்தப்பட்ட, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மாஸ்க் அணிந்து செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு, மாஸ்க் மட்டுமே வைரஸுக்கு எதிரான பாதுகாப்பிற்கான ஒரே நம்பிக்கை. அது நன்றாக பொருந்தும் வகையில் இருக்க வேண்டும்.
வைரஸ் தொற்று ஏற்படும் பட்சத்தில் அவசரத் தேவைகளுக்குத் தயாராக வேண்டும். உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் குறித்த சந்தேகம் ஏற்பட்டால், தொற்று ஏற்பட்டிருக்குமே என நினைத்தால், முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்யவும்.
ஆரோக்கியமான நோயெதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உடலை விட பாதுகாப்பானது எதுவும் இல்லை. அதை அடைய, பல அத்தியாசிய வைட்டமின்களை, நோய் எதிர்ப்பு சக்திகள் அடங்கிய உணவை கொடுங்கள். வீட்டில் சமைத்த சத்தான உணவு அவர்களை தொற்றில் இருந்து காக்கும்.
உங்கள் குழந்தை அனைத்து முக்கியமான ஊட்டச்சத்துக்களையும், குறிப்பாக வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகளை வழங்குவதன் மூலம் ஓமிக்ரானில் இருந்து முழுமையாக பாதுகாக்கலாம்.
மீன் தலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
தடுப்பூசி
காய்ச்சல் உட்பட அனைத்து வழக்கமான தடுப்பூசிகளை மறக்காமல் போடுவது மிக அவசியம். ஒமிக்ரான் உடலில் காய்ச்சல் போன்ற பாதிப்பை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் நம்புகின்றனர். எனவே வழக்கமான தடுப்பூசிகள் வைரஸை எதிர்த்துப் போராட உங்கள் குழந்தையின் உடலை பலப்படுத்தலாம்.
சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைககளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்றவற்றை கற்றுக் கொடுக்கவும்.மாஸ்குகளின் சரியான பயன்பாடு, சமூக விலகல், சானிடைசர்கள் மற்றும் கிருமிநாசினிகளின் பயன்பாடு ஆகியவற்றை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
ஆக்ரோஷமாக தாக்க முயன்ற மாணவன்! பரிதாப நிலையில் நின்ற ஆசிரியர்: வைரல் வீடியோ