கரைக்கு வந்த ஆயிரக்கணக்கான கடல் ஆமைகள்: பிரமிக்க வைக்கும் காட்சி
கடல் ஆமைகள் தனது இனப்பெருக்கத்திற்காக கடற்கரைக்கு வரும் காட்சியினை பிரபல IFS அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆலிவ் நிற சிற்றாமை
ஆலிவ் நிறச் சிற்றாமை (Olive ridley turtle) என்பது இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் காணப்படும் கடல் ஆமை வகை ஆகும்.
இந்த ஆமைகள் இதய வடிவம் கொண்டு ஆலிவ் பச்சை நிறத்தில் இருப்பதால் ஆலிவ் நிற சிற்றாமை என்று பெயர் பெற்றன.
கடற்கரையில் கண்கொள்ள காட்சி
முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இனத்தைச் சேர்ந்த கடல் ஆமைகள் கருத்தரித்ததும், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு கடற்கரையை நோக்கி கூட்டமாகப் பயணிக்கத் தொடங்கும்.
அவை பெரும் கூட்டமாக வந்து மணலில் குழி தோண்டி முட்டைகளை இடுகின்றன. முட்டை இடுவதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ஆலிவ் ரிட்லி ஆமைகள் ஒடிசா கடற்கரைக்கு வந்து சேரும்.
IFS அதிகாரி சுசந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், 2.45 லட்சத்திற்கும் அதிகமான ஆமைகள் மணலில் முட்டையிடுவதற்காக காஹிர்மாதா மற்றும் ருஷிகுல்யா ரூக்கரி ஆகிய கடற்கரை பகுதிகளுக்கு கூட்டமாக படையெடுத்து வரும் காட்சியினை தற்போது காணலாம்.
நடிகரை கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித்! கண்ணீர் மல்க கேட்ட மன்னிப்பு: விருது பறிக்கப்படுகின்றதா?
Happy to inform that one of the most spectacular natural event-the arribada- has started at Gahiramatha coast of Kendrapada district, Odisha.
— Susanta Nanda IFS (@susantananda3) March 26, 2022
Annual mass nesting of lakhs of female Olive Ridleys is breathtaking. Staff are all geared up to give them the best possible protection. pic.twitter.com/EoOYnOU1dT