யாசகம் எடுத்த மூதாட்டி உயிரிழந்த சோகம்.. சுருக்குப் பையை திறந்ததும் கலங்கி நின்ற பொலிசார்
யாசகம் எடுத்து வாழ்ந்து வந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர் வைத்திருந்த சுருக்குப் பையை பார்த்த பொலிசார் அதிர்ச்சி கார்த்திருந்துள்ளது.
யாசகம் எடுத்த மூதாட்டி
தமிழகத்தில் சேலம் மாவட்டம், அண்ணா நகர் என்னும் பகுதியில் மூதாட்டி ஒருவர் யாசகம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வீணாக தூக்கி வீசப்படும் அட்டைப்பெட்டிகளை கேரித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வந்துள்ளார்.
தனது செலவுகள் மட்டுமின்றி வரும் வருவாயில் சிறுக சிறுக சேமிக்கவும் செய்துள்ளார். இவருக்கு தனியாக வீடு எதுவும் இல்லாத காரணத்தில் சாலை ஓரத்தில் ஒரு இடத்தினை சில அமைப்புகள் செய்து அதில் வசித்து வந்துள்ளார்.
அப்பகுதியில் செல்லக்குழந்தையாக வலம்வந்த இவர் உடல்நலக் குறைவினால் திடீரென உயிரிழந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பாட்டியின் உடலைக் கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் பாட்டியின் உடைமைகளை சேகரித்த பொலிசார் கலங்க வைக்கும் அதிர்ச்சியை கண்டுள்ளனர். ஆம் குறித்த பாட்டி சுருக்குப்பை ஒன்றில் பணத்தை சேர்த்து வைத்துள்ளார்.
சுருக்குப்பையில் பார்த்த போது, மொத்தம் சுமார் 27,200 ரூபாய் இருந்ததாகவும், அதனை அரசு கருவூலத்தில் பொலிசார் ஒப்படைத்துள்ளனர்.
வயதான காலத்தில் யாசகம் செய்து வாழ்ந்து வந்த மூதாட்டி, இத்தனை ஆயிரம் ரூபாயை சேர்த்து வைத்த விஷயம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.