முட்புதரில் கேட்ட பெண்ணின் அழுகுரல்... அம்பலமானது மகனின் கேடுகெட்ட செயல்
பெற்ற தாயை மகன் முட்புதரில் வீசிச் சென்றுள்ள சம்பவம் இந்திய மாநிலமான தமிழகத்தில் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது. இந்த முட்புதரில் பெண்ணின் அழுகுரல் சத்தம் கேட்டது.
அந்த பகுதி பொதுமக்கள் சென்று பார்த்தபோது இரண்டு கால்கள் செயலிழந்த மூதாட்டியை யாரோ முட்புதரில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.
பொதுமக்கள் அவரை மீட்டு பொன்னேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், பொலிசார் குறித்த முதியவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்பு பொலிசார் நடத்திய விசாரணையில், அவர் சென்னை மணலி பெரியசேக்காடு கிராமத்தை சேர்ந்த காந்திமதி (85) என்பது தெரியவந்துள்ளது.
இவரது மூத்த மகன் ரவி கொத்தனார் வேலை செய்து வருகின்றார். இளைய மகன் சங்கர் அருள் வாக்கு சொல்பவராம். வேறு ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் தாயை ஏற்றி இவ்வாறு முட்புதறில் வீசிவிட்டு சென்றுள்ளது இளையமகன் சங்கர் என்பது தெரியவந்துள்ளது.
பெற்ற மகனே வயதான கால்கள் செயலிழந்த தாயை கொஞ்சமும் இரக்கமில்லாமல் செய்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்ட சங்கரை கைது செய்ய வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் பொலிசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.