சடலங்களுக்கு மத்தியில் மகனை தேடும் தந்தை... ஒடிசா ரயில் விபத்தில் கண்ணீர் சிந்த வைத்த காட்சி
ஒடிசாவில் நடைபெற்ற ரயில் கோர விபத்தில் உயிரிழந்த சடலங்களுக்கு மத்தியில் தந்தை ஒருவர் தனது மகனை தேடும் காணொளி கண்களை குளமாக்கியுள்ளது.
ஒடிசா ரயில் விபத்து
கொல்கத்தாவின் ஷாலிமார்- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த போது இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே தடம் புரண்டு கோர விபத்தில் சிக்கியுள்ளது.
குறித்த ரயில் தடம்புரண்டு மற்றொரு தண்டவாளத்தில் விழுந்ததால், பெங்களூரில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்ற ஹவுரா ரயில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மீது மோதியதால் மேலும் ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து தேசிய மற்றும் மாநில மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதில் 233 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 900க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலாசோரில் சடலம் வைக்கப்பட்ட இடத்தில் தந்தை ஒருவர் சடலங்களுக்கு மத்தியில், தனது மகனை தேடும் காணொளி காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.
காணொளியினை இங்கே அழுத்திப் பார்க்கவும்