ஓட்ஸ் அல்லது கஞ்சி, நீரிழிவு நோய்க்கு எது சிறந்தது?
நீரிழிவு நோயாளிகளுக்கு ஓட்ஸ் நல்லது என சிலர் நினைக்கிறார்கள் சிலர் கஞ்சி நன்மை என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் சிறந்தது எது என்பதை பார்க்கலாம்.

நீரிழிவு நோய்
நீரிழிவு நோயாளிகள், தங்கள் இரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்காத காலை உணவுகளை சாப்பிட வேண்டும்.
பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் காலையில் என்ன உணவை சாப்பிட வேண்டும் என்பது ஒரு கேள்வி உள்ளது. வாருங்கள், தெரிந்துகொள்வோம்.

தற்போது நீரிழிவு நோய் மிகவும் பொதுவான நோயாகிவிட்டது. இந்த நோய்க்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.
அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டால், நோயாளி உயிரிழக்கக் கூட நேரிடலாம். எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
எனவே காலை உணவிற்கு ஓட்ஸ் அல்லது கஞ்சி நிரிழிவு நோயாளிகளுககு சிறந்தது எனப்படுகின்றது. அந்த வகையில் எநத உணவு மிகவும் சிறந்தது என்பதை பார்க்கலாம்.

ஓட்ஸ்/கஞ்சி
நீரிழிவு நோயாளிகள், இரத்தச் சர்க்கரையில் திடீர் ஏற்றங்களைத் தடுக்க, குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகளை உண்ண வேண்டும்.
ஓட்ஸ் கஞ்சியின் கிளைசெமிக் குறியீடு சுமார் 51 முதல் 55 வரை இருக்கும். இது ஒரு குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவு.
இது மெதுவாக செரிமானம் ஆவதோடு, சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

ஓட்ஸின் கிளைசெமிக் குறியீடு, அது பதப்படுத்தப்படும் உணவின் வகையைப் பொறுத்து மாறுபடும். ஸ்டீல்-கட் ஓட்ஸ் சுமார் 53 என்ற குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.
ஆனால் இன்ஸ்டன்ட் அல்லது சுவையூட்டப்பட்ட ஓட்ஸ் 65-க்கும் அதிகமான கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருக்கலாம்.
இது சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். ஓட்ஸில் பீட்டா-குளுக்கான் எனப்படும் ஒரு சிறப்பு கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது.
இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதோடு, கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. ஓட்ஸ் கஞ்சியில் கரையாத நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது செரிமான அமைப்பையும் வயிற்றையும் சுத்தமாக வைத்திருக்க உதவும்.

உங்களுக்கு எது சிறந்தது?
இந்த நிலையில் நீரிழிவு நோயிளிக்கு உது சிறந்தது என்று பார்த்தால் இரண்டுமே நீரிழிவு நோய்க்கு மிகச் சிறந்தவை எனப்படுகின்றது. நீங்கள் ஓட்ஸ் சாப்பிட வேண்டும் என்றால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட 'இன்ஸ்டன்ட்' அல்லது 'மசாலா' ஓட்ஸைத் தவிர்க்கவும்.
எப்போதும் ஸ்டீல்-கட் ஓட்ஸ் அல்லது ரோல்டு ஓட்ஸை சாப்பிடலாம். நீங்கள் கஞ்சி சாப்பிட போகிறீர்கள் என்றால் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |