உங்கள் உடலில் இவ்வாறான அறிகுறிகள் இருக்கிறதா? கண்டிப்பாக இது ஊட்டச்சத்து குறைப்பாடு தான்...
பொதுவாகவே நமது உடலில் ஊட்டச்சத்து குறைப்பாடுகள் என்பது ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். நமது உடலில் போதுமான வைட்டமின்களும், மினரல்களும் இல்லாததால் தான் உடலில் பல பிரச்சினைகளும் உடல்நலக் குறைவும் ஏற்படுகிறது.
இதனால் இந்த ஊட்டச்சத்துக் குறைப்பாடுகள் ஏற்படும் போது உங்கள் உடலில் சில அறிகுறிகள் ஏற்படும் அவற்றை தெரிந்துக் கொண்டு அதற்கேற்றால் போல நடந்துக் கொள்ள வேண்டும்.
அறிகுறிகள்
உங்கள் தோல் வறண்டு போய் அரிப்பு ஏற்படும். ஏனெனில் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்வதால் தான் இந்த அறிகுறி தோன்றுகிறது. இந்த அறிகுறி இருப்பவர்கள் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளையும் ஊட்டசத்திற்கு ஒமேகா 3 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக இரத்தப் போக்கும் ஒரு அறிகுறிதான். இதற்கு கல்சியம் மற்றும் வைட்டமின் சி உணவுகளை எடுத்துக் கொண்டால் இரத்தப் போக்கு குறையும்.
சிலேட் குச்சிகள் அல்லது சுண்ணாம்பு பொருட்களை குழந்தைகள் அதிகம் சாப்பிட்டால் அவர்களுக்கு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடும் இருக்கும்.
குறட்டை விட்டாலும் ஊட்டச்சத்து குறைப்பாடு தான்.
வைட்டமின் ஏ குறைப்பாடு காரணமாக கண்களை சுற்றி வறட்சியாக இருக்கும். இவ்வாறு கண்கள் வறட்சியாக இருந்தாலும் ஊட்டசத்து குறைப்பாடு தான்.
ஈறுகளில் இரத்தப் போக்கும் ஒரு காரணம் தான். அதற்காக உங்கள் உணவில் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |