இறந்தவருக்கு வெட்டப்பட்ட குழியில் சென்று படுத்துக்கொண்ட நபர்
அன்றாடம் நம்மைச் சுற்றி எத்தனையோ சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் சில நம்மை சிந்திக்க வைக்கும் இன்னும் சில நம்மை சிரிக்க வைக்கும்.
அந்த வகையில் தூத்துக்கடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகில் பச்சை பெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந் 80 வயதான அப்பாவு எனும் நபர் இறந்துள்ளார்.
இறந்த நபரின் உடலை அடக்கம் செய்வதற்கு அந்த கிராமத்தின் அருகிலுள்ள சுடுகாட்டில் குழி தோண்டியுள்ளனர்.
இந்நிலையில் 45 வயது நிரம்பிய மாரியப்பன் என்பவர் குறித்த சுடுகாட்டுக்கு அருகில் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வரும் நிலையில், குழி தோண்டப்பட்ட நிலம் தன்னுடைய நிலம் எனக் கூறி தகராறு செய்துள்ளார்.
இறந்தவருக்கு வெட்டப்பட்ட குழியில் தான் சென்று படுத்துக்கொண்டது மட்டுமில்லாமல் கையில் ஒரு கத்தியும் வைத்திருந்தார். சுமார் 2 மணி நேரம் சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் போராட்டம் நடத்தியுள்ளார் மாரியப்பன்.
இந்நிலையில் விசாரணையில் குழி தோண்டப்பட்ட இடம் சுடுகாட்டுக்கு சொந்தமான நிலம் எனப் பொலிசாருக்கு தெரியவந்ததும் மாரியப்பனை கண்டித்து அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் இறந்தவரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.