இந்தப் படங்களை எல்லாம் குழந்தைகள் பார்த்ததால் அவ்வளவு தான்: 5 வருடம் ஜெயில் தண்டனையாம்!
பொதுவாகவே குழந்தைகளுக்கு டிவி பார்ப்பதெல்லாம் அவ்வளவு இஷ்டமான ஒரு விடயம் தான்.
ஆனால் ஒரு நாட்டில் குழந்தைகள் இந்த படங்களைப் பார்த்தால் 5 வருடம் ஜெயில் தான் என கடுமையான தண்டனை வழங்கப்படுகிறதாம்.
5 வருட சிறைத்தண்டனை

வடகொரியாவில் சிறுவர்கள் ஹாலிவூட் படங்கள் மற்றும் தென் கொரியாவின் படங்களைப் பார்த்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் சிறுவர்களின் பெற்றோர்கள் 6 மாதக்கால தொழிலாளர் முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.
வடகொரியாவை அதிபர் கிம் ஜாங் உன் ஆட்சி செய்து வருகிறார்.
தென் கொரியா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பழக்கவழக்கங்களைக் கடுமையாக தவிர்க்கும் வடகொரிய அதிபர், நாட்டு மக்களும் அதனையே பின்பற்ற வேண்டும் என்று சட்டங்களைக் கொண்டுவருகிறார்.

தொடர்ந்து, தென் கொரியாவின் படங்கள் மற்றும் நாடகங்களைப் பார்ப்பதற்கும், பாடல்களை கேட்பதற்கும் ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த ஆண்டு, தென் கொரிய மற்றும் அமெரிக்க திரைப்படங்களைப் பார்த்ததற்காக இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அந்த நாடு தூக்கு தண்டனை கொடுத்திருந்தது.
குறிப்பாக, நாடகங்கள் என்று பிரபலமாக அறியப்படும் கொரிய நாடகங்களைப் பார்ப்பது அல்லது விநியோகிப்பது வட கொரியாவில் கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.