காளி கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் சீனர்களின் நூடுல்ஸ்! பின்னணியில் இப்படி ஒரு சுவாரஸ்யமா?
இந்தியாவில் கடவுளுக்கு சீன உணவு பிரசாதமாக வழங்கப்படும் விநோத கோவில் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.
கொல்கத்தாவின் டாங்ரா பகுதியில் உள்ள இந்த கோவில் உள்ள பகுதி சைனா டவுன் என்று புகழ்பெற்றது.
இந்த கோவில் உள்ள தெரு திபெத்திய பாணியில் உள்ளது. பழைய கொல்கத்தா மற்றும் கிழக்கு ஆசியாவின் அழகிய கலாச்சாரத்தை நினைவூட்டுகிறது.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த கோவிலில், அன்னைக்கு சீன உணவுகள் படைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இங்கு எரியும் தூபக் குச்சிகளும் சீனாவின் தூப குச்சிகள் தான்.
இந்த வழியில், கோவிலின் காணிக்கைகளைத் தவிர, இங்கே பரவியிருக்கும் நறுமணமும் மற்ற கோவில்களிலிருந்து வேறுபடுகின்றது.
தீய சக்திகளைத் தவிர்ப்பதற்காக, கையால் செய்யப்பட்ட காகிதங்கள் எரிக்கப்படுகின்றன.
பின்னணியில் இப்படி ஒரு சுவாரஸ்யமா?
இந்த காளி கோவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சீன மற்றும் மேற்கு வங்க மக்களின் நன்கொடைகளுடன் கட்டப்பட்டது.
கோவில் கட்டப்படுவதற்கு முன்பு, இந்த இடத்தில், கடந்த 60 ஆண்டுகளாக, இந்துக்கள் மட்டுமே அன்னையை ஒரு மரத்தடியில் வழிபட்டனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சீன சிறுவன் கடுமையாக நோய்வாய்ப்பட்டான் என கூறிய உள்ளூர் மக்கள், அவனை குணமாக்க வேண்டும் என மரத்தின் கீழ் படுக்க வைத்து அன்னையை பிரார்த்தனை செய்துள்ளனர்.
சிறுவன் அதிசயமாக குணமடைந்த பின்னர், இந்த கோவில் இந்து சமூக நம்பிக்கையையும் சீன சமூக நம்பிக்கையையும் இணைக்கும் மையமாக மாறியுள்ளது.
சீன மக்கள் கோவிலுக்கு வரத் தொடங்கியதும், அவர்கள் தங்கள் கலாச்சாரத்தின் படி காளி தெய்வத்திற்கு உணவுகளை படைக்கத் தொடங்கினர்.
அப்போதிருந்து, நூடுல்ஸ், சாப்ஸ் போன்றவை இங்கு அன்னைக்கு நைவேத்யம் செய்யப்படுகின்றன.