பல நாடுகளை கைலாசாவாக உருவாக்க திட்டம் தீட்டும் நித்தியானந்தா: அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன தெரியுமா?
பல நாடுகளில் தனது ஆசிரமங்களை ஆரம்பிக்க ஆலோசனை நடத்தி வருகின்றார் நித்தியானந்தா. சர்ச்சைகளின் மூச்சுக் காற்றே நித்தியானந்தா தான்.
கைலாசா எனும் புதிய நாட்டை வாங்கி விட்டதாகவும், அதனை இந்துக்களின் புனித பூமியாக மாறும் என்று பல புரளிகளைக் கிளப்பி வந்தவர் தான் நித்தியானந்தா.
கைலாசா எங்கு இருக்கிறது, நித்தியானந்தா எங்கிருக்கிறது என அனைருக்கும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது. இந்நிலையில், கைலாசா பசிபிக் பெருங்கடல் பகுதியில் கோஸ்டாரிகா தீவுகளில் ஒன்றில் தான் அமைந்திருப்பதாக கூறப்பட்டு வருகின்றது.
தற்போது நித்தியானந்தா சில வெளிநாடுகளில் உள்ள நகரங்களுடன் வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களை செய்திருப்பதாக கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல் பல நாடுகளில் ஆசிரமங்களை திறக்கவுள்ளதாகவும் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றது.
மேலும், இது தொடர்பான தெளிவான விடயங்களை கீழுள்ள காணொளி மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.