10 வயதில் நடிகை நித்யா மேனன் எப்படி இருந்துள்ளார் தெரியுமா? வைரலாகும் வீடியோ!
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நித்யா மேனன்.
இவரின் நடிப்புக்கும், அழகுக்குமே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
அதுவும், இப்படத்தில் நித்யா மேனனின் நடிப்பு இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வந்தது.
இந்நிலையில், நித்யா மேனன் 1988ஆம் ஆண்டு 10 வயதில் the monkey who knew too much என்ற படத்தில் நடித்திருந்த சிறு வயது வீடியோ காட்சி பாடல் ஒன்று ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.
இந்த படத்தில், நடிகை தபுவிற்கு தங்கையாக நடித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்டாக பரவி வருகிறது.
how frikken adorable ?❤️#NithyaMenon ✨️ https://t.co/ZTkSgzgRf4
— thea? (@thea_s_) September 19, 2022
