எடை குறைக்க ஜிம் உடற்பயிற்சிகள் மட்டும் போதாது..நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் விளக்கம்
பலர் எடை இழக்க ஜிம்மிற்கு சென்றும் ஏன் எடை குறையவில்லை என்ற சந்தேகத்தில் இருப்பார்கள். இதற்கு நீதா அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் விளக்கமளித்துள்ளார்.
உடற்பயிற்சி நிபுணர் வினோத் சன்னா
ஆனந்த் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் எடை இழப்பு பயணங்களுக்கு உதவிய பிரபல உடற்பயிற்சியாளர் வினோத் சன்னா, உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான நுண்ணறிவுகளை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதாவது, "பலருக்கு அடிக்கடி ஜிம்மிற்குச் சென்றாலும் ஏன் எடையைக் குறைக்க முடியவில்லை என்று யோசிப்பார்கள். அந்த வகையில் பார்த்தால் நாம் எவ்வளவு உடற்பயிற்ச்சி செய்கின்றோமோ அதே சம அளவிற்கு ஊட்டச்சத்தும் அதனுடன் கைகோர்த்து செல்ல வேண்டும்.
உடல் எடை இழப்பதில் நீங்கள் கெட்ட கொழுப்பை கரைக்க நினைத்தால் நன்கு கட்டமைக்கப்பட்ட உணவுத் திட்டம் மட்டுமே அதை அடைய உதவும்” என கூறியுள்ளார்.
ஒரு எடை இழக்க முயற்சிக்கும் நபர் ஒரு கட்டுப்பாடான உடற்பயிற்சியுடன் புரதம், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சீரான அளவில் இருக்க உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அப்படி செய்தால் உடல் எடை குறையும். அதுவும் ஒரு வருடத்திற்கு 3 கிலோ எடையை குறைக்கலாம். இது உடல் சம்பந்தப்பட்ட விடயம் இது மாயாஜாலம் அல்ல என வினோத் கூறியுள்ளார். நீங்கள் எடை இழக்கும் வித்தியாசத்தை 3 முதல் 4 மாதங்களில் பார்க்கத் தொடங்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |